Sivakarthikeyan : பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்திக்கு அழகிய வீடியோ ஒன்றை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கலில் போட்டியாளராக பங்கேற்று, அதில் வெற்றி பெற்று, அதன் மூலம் கிடைத்த புகழின் காரணமாக சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சிவகார்த்திகேயன். இவர் ஆங்கராக இருந்த காலகட்டத்திலேயே இவருக்கு மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பு இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு "மரினா" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் நடிகராக கலை உலகில் அறிமுகமானார். மெல்ல மெல்ல சிறு சிறு கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கி, இப்பொழுது ஒரு சிறந்த நடிகராகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் தமிழ் திரையுலகில் விளங்கி வருகிறார். இன்னும் 40 வயதை எட்டவில்லை என்றாலும், அடுத்த தளபதி என்று சொல்லக்கூடிய அளவிற்கு தன்னுடைய நடிப்பு திறமையால் தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு திகழ்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
undefined
வில்லனாக மட்டுமல்ல; படத்தில் ஹீரோவாகவும் அசத்திய டெல்லி கணேஷ் - ஒரு சுவாரசிய தகவல் இதோ!
திருச்சியை சேர்ந்த இவருக்கு கடந்த 2010ம் ஆண்டு ஆர்த்தி என்பவரோடு திருமணம் நடந்து முடிந்தது. 14 ஆண்டுகளாக மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இந்த ஜோடிக்கு, ஒரு பெண் குழந்தையும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். தன்னுடைய திரையுலக வாழ்க்கையை எந்த அளவுக்கு சிறப்பாக நடத்தி வருகிறாரோ, அதே அளவிற்கு தன்னுடைய குடும்ப வாழ்க்கையையும் மிக நேர்த்தியாக செயல்படுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன்.
தனக்கு என்னதான் திரைத்துறையில் கஷ்டங்களும், எதிர்ப்புகளும், சோதனைகளும் வந்தாலும் அவை அனைத்திலிருந்தும் விடுபட தனக்கு ஆறுதல் குறிக்கொண்டு, குடும்ப பொறுப்பையும் தனக்காக ஏற்றுக்கொண்டு தங்களை வழிநடத்தி வரும் தன்னுடைய மனைவி ஆர்த்தி குறித்து பல மேடைகளில் பெருமையாக சிவகார்த்திகேயன் பேசி இருக்கிறார்.
இந்த சூழலில் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் தனது மனைவி ஆர்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சொன்னதோடு, அமரன் திரைப்பட படப்பிடிப்பின் போது முகுந்த் வரதராஜன் கேட்டப்பில் இருந்த அவர், தனது இல்லத்திற்கு சென்று சமையல்கட்டில் சமைத்துக் கொண்டிருந்த ஆர்த்திக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். தற்பொழுது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
சரத் பாபுவுடன் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பிய ஜெயலலிதா! அவரே கூறிய தகவல்!