தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவி விலக வேண்டும்! கே ஆர் பரபரப்பு அறிக்கை!

By manimegalai a  |  First Published Nov 9, 2024, 8:02 PM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின், முன்னாள் தலைவரும், பட அதிபருமான கே ஆர் புதிய படங்கள் தொடங்க தடை விதிக்க வேண்டும் என்றும், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவி விலக வேண்டும் என பரபரப்பு அறிக்கை ஒன்றி வெளியிட்டுள்ளார்.
 


இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது... 'தமிழ் சினிமா இதற்கு முன்பு இல்லாத வகையில் தற்போது பல தாக்குதல்களுக்கு ஆளாகி வருகிறது. படம் இயக்குவது முதல், அதன் வியாபாரம், ரிலீஸ், கலெக்ஷன், என ஒவ்வொன்றும் மிகவும் சவாலானதாக மாறி உள்ளதால்... அதற்கான பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து தீர்வு காண வேண்டிய தயாரிப்பாளர் சங்கம், கடந்த 4 வருடங்களுக்கு மேலாக முடங்கி போய் உள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

பெரிய நடிகர்களின் படங்களின் வசூலை தாண்டி, மற்ற படங்களுக்கு போஸ்டர் ஒட்டும் காசு கூட தயாரிப்பாளர்களுக்கு கிடைப்பது இல்லை. இதைத் தவிர சாட்டிலைட் வியாபாரம், ஓ டி டி ரைட்ஸ், ஆடியோ ரைட்ஸ், கியூ கட்டணம், டிக்கெட் புக்கிங் கட்டணம், உட்பட எதையுமே முறைப்படுத்த தெரியாத தயாரிப்பாளர் சங்கத் தலைவருக்கு ஏன் அந்த பதவி கொடுக்க வேண்டும்?

Latest Videos

undefined

இயக்கிய 6 படங்களும் ஹிட்! 50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் அட்லீயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

இத்தனை வருடங்கள் எங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என பொறுத்து பொறுத்து பார்த்து இப்போது பொங்கி எழுந்துள்ளோம். எனவே உறுப்பினர்கள் தலைமைக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.  தீர்மானம் கொண்டுவர தயாராக இருந்த நிலையில், சுயநல சூழ்ச்சியாக நடிகர் தனுஷுக்கு ரெக்கார்டு, புதிய படங்களை தொடங்காமல் வேலை நிறுத்தம், என சிலர் அரசியல் செய்ய துவங்கி விட்டனர். இதை அனைத்தையும் பார்த்து நேரடியாக கேள்வி கேட்கும் ஜனநாயக உரிமையை மறுக்கும் நோக்கத்தில், செப்டம்பர் மாதம் நடைபெற வேண்டிய பொதுக்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.

வேலை நிறுத்தம், நடிகர்களுக்கு எதிராக ரெக்கார்டு போன்ற முக்கியமான விஷயங்களை மற்ற சங்கங்களுடன் கலந்து பேசி பொதுக்குழுவில் விவாதித்து தான் முடிவு செய்ய வேண்டும் என கூறுகின்றனர். சுயநலத்திற்காக தன்னிச்சையாக தீர்மானம் போடக்கூடாது. இதுபோன்ற திடீர் மாற்றங்களால் மற்றவர்கள் தொழில் செய்வதற்கு தடை விதிப்பது (எம் ஆர் டி பி) சட்டத்திற்கு எதிரானதாக அமையக்கூடும் என்பது சங்கத் தலைவருக்கு தெரியுமா? தெரியாதா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

மேலும் எந்த அனுபவம் இல்லாமல், நேரடியாக இதுபோன்ற பொறுப்புகளுக்கு வருபவர்களால் தான் இது போல் யோசிக்க முடியும். பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியாத பிரச்சனை என்பதை இல்லை இதுதானே திரையுலகம் வழக்கம். என தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் கே ஆர்.

'அமரன்'-னுக்கு இசையால் வலு சேர்த்த ஜிவி! சிவகார்த்திகேயன் கொடுத்த காஸ்டலி வாட்ச்; எவ்வளவு தெரியுமா?

1994 ஆம் ஆண்டு சங்க உறுப்பினர்கள் நலனுக்காக கே ஆர் ஜி அவர்கள் அறக்கட்டளையை உருவாக்கினோம். அதில் வரும் வட்டியை எடுத்து தான் உதவிகள் செய்ய வேண்டுமே தவிர, டெபாசிட் தொகையில் கை வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அது சட்டப்படி கிரிமினல் குற்றம் என்றும் எச்சரிக்கும் விதத்தில் இந்த அறிக்கையில் பேசி கூறப்பட்டுள்ளது. அதேபோல் தங்களது சொந்த பிரச்சினைகளில் இருந்து தப்பிக்க அப்பிராணி போல முகத்தை வைத்துக்கொண்டு தலைவர் பதவியை ஒரு கேடயமாக பயன்படுத்திக் கொண்டிருப்பதை இனியும் சகித்துக் கொண்டிருக்க முடியாது. இந்த சினிமா துறைக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என்று முரளி நினைத்தால், அவர் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!