Game Changer : ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அப்படத்தின் முக்கிய அப்டேட் நாளை வெளியாகிறது.
பிரபல இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியாகி பெரிய அளவில் வசூல் ரீதியாக சாதனை படைக்காத திரைப்படம் தான் இந்தியன் 2. கடந்த ஐந்து ஆண்டுகளாகவே இந்த திரைப்படத்திற்காக மிகப்பெரிய சிரமங்களை சங்கர் மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தொழில் நுட்ப ரீதியாகவும், கண்டன்டு ரீதியாகவும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்கின்ற ஒரு பரவலான தகவல் இருந்து வருகிறது.
இந்த சூழலில் இந்தியன் 2 திரைப்படத்தை எடுத்து வந்த அதே நேரம் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்கின்ற திரைப்படத்தை கடந்த சில வருடங்களாகவே இயக்கி வந்தார் சங்கர். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஜினியின் எந்திரன் படத்தின் இரண்டாம் பாக பணிகளை முடித்த பிறகு சுமார் ஐந்து ஆண்டுகால போராட்டத்திற்கு பிறகு தான் அவர் இந்தியன் 2 திரைப்படத்தை வெளியிட்டார்.
அமரன் படம் ஓடும் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு? திடீர்னு என்ன ஆச்சு?
இருப்பினும் அந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் சாதனை படைக்காத நிலையில் தற்போது தன்னுடைய கேம் சேஞ்சர் திரைப்படத்தை தான் பெரிய அளவில் நம்பி இருக்கிறார் இயக்குனர் சங்கர். கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான நடிகர் அர்ஜுனின் "ஜென்டில்மேன்" திரைப்படத்தின் மூலம் இயக்குனர் சங்கர் தமிழ் திரை உலகில் களமிறங்கினார். ஹிந்தி மற்றும் தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனர் என்கின்ற பட்டத்தோடு அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
from Tomorrow💥🔥
A small surprise before the celebration….💥💥 pic.twitter.com/s6AvhNWlpT
இந்த சூழலில் தெலுங்கு மொழியில் அவர் முதல் முறையாக ஒரு திரைப்படத்தை இயக்குகிறார். கேம் சேஞ்சர் என்கின்ற அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், நாளை அந்த திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் அதற்கான ஒரு சிறு முன்னோட்டத்தையும் இப்போது தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இயக்குனர் சங்கர் வெளியிட்டுள்ளார். இந்த படத்திற்கு பிறகு நேரடியாக அவர் வேள் பாரி திரைப்பட பணிகளை துவங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புஷ்பாவில் பட்டையை கிளப்பிய சமந்தா; அப்போ புஷ்பா 2வில் யாரு? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!