MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • ஆதி குணசேகரனின் பிளானை சல்லி சல்லியாய் நொறுக்கிய விசாலாட்சி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிரடி ட்விஸ்ட்

ஆதி குணசேகரனின் பிளானை சல்லி சல்லியாய் நொறுக்கிய விசாலாட்சி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் அதிரடி ட்விஸ்ட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டில் ஒரு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருக்கும் விஷயம் விசாலாட்சிக்கு தெரியவந்துள்ளது. அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 12 2026, 09:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும், சக்தியும் ஜோடியாக கொடைக்கானலுக்கு ட்ரிப் சென்றிருக்கும் நிலையில், வீட்டில் உள்ள கதிர் மற்றும் ஞானம் தன்னுடைய அண்ணனின் பேச்சைக் கேட்டு, தங்களின் மனைவிகளிடம் எமோஷனலாக பேசி, அவர்களை தங்கள் வழிக்கு கொண்டு வர பிளான் போடுகிறார்கள். ஆனால் நந்தினியும், ரேணுகாவும் அவர்களுக்கு பிடி கொடுக்க மறுக்கிறார்கள். இவர்களின் இந்த திடீர் மனமாற்றத்தில் ஏதோ ஒரு உள்குத்து இருக்கிறது என சந்தேகப்படுகிறார்கள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

25
பூஜை நடத்த திட்டம்
Image Credit : youtube/suntv

பூஜை நடத்த திட்டம்

வீட்டில் உள்ள பெண்கள் அனைவரையும் அழைத்து கதிர் மற்றும் ஞானம் அவர்களிடம் ஹாலில் வைத்து பேசுகிறார்கள். அப்போது நாளைக்கு நம்ம வீட்டுல ஒரு பெரிய மனுஷன் வந்து பூஜை பண்ண இருப்பதாகவும், அந்த பூஜையில் கலந்துகொள்ளும் அனைவருக்குமே நல்லதே நடக்கும் என கூறுகிறார் ஞானம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நந்தினி, சக்தியும் ஜனனியும் இந்த வீட்டில் இல்லாததால், தற்போதைக்கு அந்த பூஜை வேண்டாம் என கூறும் நந்தினி, அவர்கள் இந்த வீட்டில் இருந்தால் தான் எல்லாரும் ஒன்னா இருக்குறதா அர்த்தம், அவன் வந்தா தான் எல்லாரும் ஒன்னா பூஜை பண்ண முடியும் என கூறுகிறார்கள்.

Related Articles

Related image1
தேவசகாயத்திடம் தொக்கா மாட்டிக்கொண்ட ஜனனி... அலறவிட தயாராகும் ஆலிவர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Related image2
ஆலிவரின் ஆட்டம் ஆரம்பம்... ஜனனியை சேஸ் பண்ணும் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அனல்பறக்கும் ட்விஸ்ட்
35
பூஜையை ஏற்பாடு செய்தது யார்?
Image Credit : youtube/suntv

பூஜையை ஏற்பாடு செய்தது யார்?

அதுமட்டுமின்றி தன்னுடைய மகன்கள் பூஜை நடத்த வேண்டும் என சொன்னதைக் கேட்டு விசாலாட்சிக்கு டவுட் வருகிறது. உடனே அவர்களிடம் இந்த பூஜையை யார் ஏற்பாடு செய்தது என கேட்டதற்கு இருவரும் முழிக்கிறார்கள். பின்னர் இருவருமே மழுப்பலான பதிலைக் கூறுகிறார்கள். இதன் பின்னர் தான் இது ஆதி குணசேகரனின் வேலை என்பது விசாலாட்சிக்கு தெரியவருகிறது. இருப்பினும் அதை கதிர் மற்றும் ஞானத்திடம் வெளிப்படையாக கேட்காமல், இது யார் ஏற்பாடு செய்த பூஜை என்பது தெரியாத வரை இதற்கு தாங்கள் சம்மதிக்க மாட்டோம் என கூறிவிட்டு செல்கிறார்.

45
மகனின் சூட்சமத்தை கண்டுபிடித்த விசாலாட்சி
Image Credit : youtube/suntv

மகனின் சூட்சமத்தை கண்டுபிடித்த விசாலாட்சி

பின்னர் கிச்சனில் ரேணுகா, நந்தினி, தர்ஷினி, பார்கவி ஆகியோருடன் கலந்து பேசுகிறார் விசாலாட்சி. அப்போது குணசேகரனின் பிளான் மொத்ததையும் சொல்கிறார். இவங்க மனசுல இருக்குறது என்ன தெரியுமா? ஜனனி திரும்பி வர்றதுக்குள்ள உங்க எல்லாரையும் இவங்களோட ஒட்ட வச்சு, அவளை மொத்தமா வெட்டி விட்றனும்னு திட்டம் போட்டிருக்காங்க. நீங்க தான் ஜாக்கிரதையா இருக்கணும் என கூறுகிறார். ஆதி குணசேகரன் ரூமில் இருந்துகொண்டே ஆடும் கேமுக்கு விசாலாட்சி எண்டு கார்டு போட்டுள்ளார் போல தெரிகிறது. இதனால் செம சம்பவம் காத்திருக்கிறது.

55
செல்ல சண்டை போடும் ஜனனி - சக்தி
Image Credit : youtube/suntv

செல்ல சண்டை போடும் ஜனனி - சக்தி

மறுபுறம் கொடைக்கானலில் சக்தி மற்றும் ஜனனி ஜாலியாக ரொமான்ஸ் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஒரு இடத்தில் தந்தை ஒருவர் தன்னுடைய மகளுடன் கொஞ்சி விளையாடுவதை பார்த்த சக்தி, இதே மாதிரி ஒரு பெண் குழந்தை நமக்கு பிறக்கணும் என கூறுகிறார். அதற்கு ஜனனி, என்ன பெண் குழந்தைனே பிக்ஸ் ஆகிவிட்டியா நீ என கேட்க, எங்க வீட்டு ஆம்பளைங்கள பார்த்தேல்ல, பையன் தான் வேணுமா உனக்கு, எனக்கு பொண்ணு தான் வேணும் என கூறி இருவரும் செல்லச் சண்டை போடுகிறார்கள். இதையடுத்து என்ன ஆனது? தேவசகாயம் ஜனனியை கடத்தினாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
சிதறப்போகும் சந்திரகலாவின் சாம்ராஜ்யம்;இனிமேல் கார்த்திக்கின் ஆட்டம் ஆரம்பம்; கதி கலங்க போகும் மாமியார்!
Recommended image2
சொந்த பந்தங்கள் சூழ ஜேஜேவென நடந்த விழா! தாய்மாமன் கடமையை கச்சிதமாக முடித்த KPY சரத்!
Recommended image3
சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு கைமாறிய சூப்பர் ஹிட் சீரியல் - இதென்ன புது ட்விஸ்டா இருக்கு..!
Related Stories
Recommended image1
தேவசகாயத்திடம் தொக்கா மாட்டிக்கொண்ட ஜனனி... அலறவிட தயாராகும் ஆலிவர் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Recommended image2
ஆலிவரின் ஆட்டம் ஆரம்பம்... ஜனனியை சேஸ் பண்ணும் தேவசகாயம் - எதிர்நீச்சல் தொடர்கிறது அனல்பறக்கும் ட்விஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved