கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யோக ஶ்ரீ, டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் மகள். இவரது குரல் வளத்தைக் கண்டறிந்த ஆசிரியை மகேஷ்வரி, பல்வேறு போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தினார். இதனால், சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரபல பாடகர்களை வியக்க வைத்தார்.
மாணவர்களும் ஆசிரியர்களும்
கல்விக்காக மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அதிலும் தனியார் பள்ளிகளில் பல லட்சங்களில் கொட்டிக்கொடுத்து கற்கும் கல்வியை இலவசமாகவே வழங்கி வருகிறது தமிழக அரசு. தனியார் பள்ளி மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை விட அரசு பள்ளி மாணவ, மாணவிகள் போட்டி போட்டு மதிப்பெண்களை அள்ளி செல்கின்றனர். அந்த அளவிற்கு அரசு பள்ளியின் தரம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதற்கு தமிழக அரசு மேற்கொண்ட பலவித முயற்சிகள் தான். அதிலும் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது.
undefined
மாணவியின் பாடல் திறமை
ஒவ்வொரு மாணவரின் திறமையை கண்டறித்து அந்த மாணவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் ஊக்கத்தை வழங்கி முன்னேற்றும் குருவாக ஆசிரியர்கள் உள்ளனர். ஒரு மாணவருக்கு ஆசிரியர் ஊக்கம் அளித்தால் போதும் மாணவர்கள் ஜொலிக்க முடியும். அப்படி ஒரு நிகழ்வு தான் சமீப நாட்களில் நடத்துள்ளது. கரூர் மாவட்டம் மணவாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி யோக ஶ்ரீ, பால்வார்பட்டி கிராமத்தில் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியின் ஒன்பதாவது படிக்கும் யோக ஶ்ரீக்கு சிறு வயது முதல் சிறந்த குரல் வளம் இருந்துள்ளது. இதனை கண்டறிந்த அந்த மாணவியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியை மகேஷ்வரி, இந்த மாணவியை ஊக்கப்படுத்தியுள்ளார். பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்ள உற்சாகப்படுத்தியுள்ளார்.
கலக்கிய மாணவி
அரசுப்பள்ளி மாணவர்களுக்காக தமிழ்நாடு பள்ளிக் கல்விதுறை ஆண்டுதோறும் நடத்தும் கலைப் போட்டிகளில் கரூர் மாவட்டம் சார்பாக பங்கேற்று அங்கு வந்திருந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் ஆச்சரியப்படைத்தி இருக்கிறார் யோக ஶ்ரீ , இந்தநிலையில் தான் ஆசிரியை மகேஷ்வரி தனது மாணவி யோக ஶ்ரீயை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயன்றுள்ளார். இதற்காக தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற சரிகமப லிட்டில் சாம்பியன்ஸ்ல் மேடை ஏற்றி இருக்கிறார். அப்போது அவர் பாடிய பாடல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதுவும் நடுவர்களாக இருந்த பிரபல பாடகர்களையும் ஆச்சர்யம் செய்துள்ளது. பி சுசீலா பாடலையும், ஆஷா போன்ஸ்லே பாடலையும் பாடி அரங்கை திகைக்க வைத்திருக்கிறார்.