Blue Sattai Maran : திரைப்பட விமர்சகர் மற்றும் இயக்குனர் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக மீண்டும் ஒரு நடிகர் குரல் கொடுத்துள்ளார்.
ஒரு திரைப்படம் என்பதும், அந்த திரைப்படத்தை விமர்சிப்பது என்பது சினிமா உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இருந்து வரும் ஒரு விஷயம் தான். ஆனால் அறிவியல் வளர்ந்து விட்ட இந்த டிஜிட்டல் யுகத்தில், ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால் அதை விமர்சிக்க ஓராயிரம் நபர்கள் தற்பொழுது இருக்கின்றனர் என்பது தான் நிதர்சனமான உண்மை. முன்பெல்லாம் திரைவிமர்சனம் பார்க்க வேண்டும் என்றால் ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும்.
ஆனால் இன்றைக்கு நிலையே வேறு, படத்தின் டைட்டில் கார்டு எப்படி இருக்கிறது என்று துவங்கி, அங்கம் அங்கமாக ஒரு திரைப்படம் விமர்சனம் செய்யப்படுகிறது என்பதே உண்மை. அதுமட்டுமல்ல ஒரு திரைப்படத்தின் வெற்றி தோல்வியை கூட இந்த விமர்சனங்கள் இப்போது முடிவு செய்துவிடுகிறது என்பதே ஹை லைட். அந்த வகையில் தமிழ் டாக்கீஸ் என்ற பெயரில் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகின்றன மூத்த திரைப்பட விமர்சகர் இளமாறன். ப்ளூ சட்டை மாறன் என்றால் இன்று தமிழ் நாட்டில் தெரியாத ஆளே இல்லை எனலாம்.
undefined
செம கஷ்டமான டியூன் தந்த யுவன்; அட இதெல்லாம் ஜுஜுபினு அசால்டாக லிரிக்ஸ் எழுதி மிரட்டிய வாலி!
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆதம் பாபா தயாரிப்பில், "ஆண்டி இந்தியன்" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருந்தார் திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன். இந்த திரைப்படத்தில் ராதாரவி, சின்னத்திரை புகழ் பாலா, மூத்த தமிழ் திரையுலக நடிகர் இளங்கோ குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் பெரிய அளவில் பிரச்சனைகளை சந்தித்தது. இந்த சூழலில் ஒரு திரைப்படம் வெளியாகிறது என்றால், அதை திரையரங்கில் பார்ப்பதற்கு முன்னதாகவே, ப்ளூ சட்டை மாறனின் திரை விமர்சனத்தை பார்த்துவிட்டு அப்பிடத்திற்கு செல்வதற்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றனர்.
அந்த வகையில் அமரன் திரைப்படத்தை அவர் பெரிய அளவில் ட்ரோல் செய்த நிலையில் தற்பொழுது அவருக்கு எதிராக ஒரு நடிகர் கண்டன குரலை எழுப்பி இருக்கிறார். ஏற்கனவே பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி "விமர்சித்துக் கொள்ளும் ப்ளூ சட்டை மாறன்" என்று மாறனை கடுமையாக சாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும் அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை!
முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவுறுப்பாக தனிமனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது! …
அந்த வகையில் பிரபல திரைப்பட நடிகர் கலையரசன் வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் "ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும், அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் தனிமனித உரிமை. ஆனால் முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவருப்பாக தனி மனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று கூறி மாறனை டேக் செய்து ஒரு பதிவை அவர் வெளியிட்டுள்ளார்.
த.வெ.க; கட்சியை வளர்க்க "அந்த" யுக்தியை கையாளப்போகிறாரா விஜய்? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!