Varalaxmi Sarathkumar : பிரபல நடிகை மற்றும் சமூக ஆர்வலர் வரலட்சுமி சரத்குமார் தனது தந்தையின் இல்லத்திற்கு சென்று தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் கமலஹாசனின் நடிப்பும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஸ்டைலும் ஒன்றாக இணைந்த கலவையாக இருக்கும் ஒரு நடிகர் தான் சரத்குமார் என்று பலரும் அவரை பாராட்டுவது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் கடந்த பல ஆண்டுகளாகவே டாப் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர், தன்னுடைய மகள் வரலட்சுமி சரத்குமார், திரைத்துறை பக்கம் வரக்கூடாது என்கின்ற ஒரு முடிவோடு தான் இருந்திருக்கிறார். இன்னும் சொல்ல போனால் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தில் ஜெனிலியா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானது வரலட்சுமி சரத்குமார் தான். இந்த சூழலில் தான் தந்தையின் விருப்பத்தோடு பிரபல நடிகர் சிம்புவின் "போடா போடி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார்.
உண்மையில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை நெகட்டிவ் கேரக்டர்களில் நடித்து அசத்திய நடிகைகள் வெகு சிலர். அதில் மிகச் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வரலட்சுமி சரத்குமார். பல முன்னணி நடிகர்களோடு இணைந்து பல திரைப்படங்களில் இவர் பணியாற்றி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் "சேவ் சக்தி" என்கின்ற ஒரு முன்னெடுப்பை நடத்தி வரும் அவர், அதன் மூலம் ஆதரவற்று தெருக்களில் உள்ள நாய்களை பேணி பாதுகாத்து வருகின்றார். திரைத்துறையில் விஷாலோடு கிசுகிசுக்கப்பட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாகவே தனது கல்யாணத்தை தள்ளிபோட்டுக்கொண்டு இருந்தார்.
undefined
கடவுள் தந்த தீபாவளி பரிசு; மகிழ்ச்சியில் "தாத்தா எம்.எஸ் பாஸ்கர்" - வெளியான லவ்லி கிளிக்ஸ்!
இந்த சூழலில் நான் அவர் பிரபல தொழிலதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவரை கடந்த ஜூலை மாதம் மூன்றாம் தேதி திருமணம் செய்து கொண்டார். வெளிநாட்டில் இவர்களுடைய திருமணம் நடந்த நிலையில் சென்னையில் அதற்கான திருமண வரவேற்பு நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகும் தான் நடிக்க உள்ளதாகவும். தனது கணவருக்கும் அதில் எந்தவிதமான மறுப்பும் இல்லை என்றும் வரலட்சுமி கூறியிருந்தார். அதை வழிமொழிந்து பேசிய அவரது கணவர் நிக்கோலை "எனது மனைவிக்கு முதல் காதல் நடிப்பு தான். அதற்கு எப்பொழுதும் நான் மறுப்பு சொல்ல மாட்டேன்" என்று கூறியிருந்தார்.
இந்த சூழ்நிலையில் தலை தீபாவளி கொண்டாடிய நிக்கோலை மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகிய இருவரும் அப்பா சரத்குமார் வீட்டிற்கு வந்த நிலையில். அவர்களுக்கு தடபுடலாக விருந்து வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சரத்குமாரின் மகனோடு, மருமகன் நிகோலாய் பட்டாசு வெடித்து மகிழ்ந்துள்ளார். இந்த வீடியோ இப்பொது வைரலாகி வருகின்றது.
"டிசம்பரில் சூறாவளி பயணம்" த.வெ.க கட்சி தலைவர் விஜயின் அடுத்த அரசியல் மூவ் இது தானா?