த.வெ.க; கட்சியை வளர்க்க "அந்த" யுக்தியை கையாளப்போகிறாரா விஜய்? லேட்டஸ்ட் அப்டேட் இதோ!
Thalapathy Vijay : தளபதி விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, ஒரு முயற்சியை எடுக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
TVK Vijay
தமிழக அரசியல் களத்தில் இப்பொழுது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறி இருக்கிறது தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என்றால் அது மிகையல்ல. தளபதி விஜய் கட்சியை அறிமுகம் செய்த புதிதில், அவருக்கு வரவேற்பு கொடுத்த இரண்டு முக்கிய அரசியல் தலைவர்கள், தற்பொழுது தளபதி விஜயை கடுமையாக சாடி வருவது அனைவரும் அறிந்ததே. திராவிட முன்னேற்ற கழகத்திற்கு எதிராக செயல்பட தான் தளபதி விஜய் களமிறங்கி இருப்பதாகவும், அந்த விஷயத்தை தாங்கள் வரவேற்பதாகவும் பாஜகவின் மூத்த அரசியல் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தனது அரசியல் கட்சியின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார் தளபதி விஜய்.
பெண்களை சீரழித்த சீமான்! நீங்கள் தான் கூமுட்டை! விஜய் அண்ணனுக்காக ரீ என்ட்ரி கொடுத்த விஜயலட்சுமி!
Tamilaga Vettri Kazhagam
இந்த சூழலில் இன்று தனது கட்சி நிர்வாகிகளோடு தமிழக வெற்றிக் கழகத்தின் உள் கட்டமைப்பு பணிகள் குறித்து தளபதி விஜய் உரையாடி இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் மாதம்தோறும் மின் கணக்கீடு, நீட் தேர்வு ரத்து, இஸ்லாமியர் உரிமை உட்பட 26 தீர்மானங்களை இன்று தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நிறைவேற்றப் பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்சார மற்றும் பால் கட்டணம் உயர்வை எதிர்த்து தமிழக அரசை கண்டித்து இன்று த.வெ.க கட்சி சார்பாக தளபதி விஜய் தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளார்.
vijay
இது ஒரு புறம் இருக்க திருவள்ளுவருக்கு குறிப்பிட்ட வர்ணம் பூசுவது, தமிழகம் வேறு தமிழ்நாடு வேறு என்பது, தமிழ் மொழி சார்ந்த விஷயங்களில் தலையிடுவது போன்ற விஷயங்களை ஒன்றிய அரசு செய்து வருவதாக கூறி, பாஜக அரசுக்கு எதிராகவும் தமிழக வெற்றிக்கழகம் இன்று தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருக்கிறது. வருகின்ற டிசம்பர் மாதம் இறுதியில் தமிழகம் முழுவதும் தன்னுடைய கட்சி பணிகள் சார்பாக சூறாவளி சுற்றுப்பயணத்தை தளபதி விஜய் மேற்கொள்ள உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.
TVK TV
இந்த சூழலில் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை பெரிய அளவில் வளர்த்திட ஒரு புதிய முன்னெடுப்பை தளபதி விஜய் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகள் தங்களுக்கு என சொந்தமாக தொலைக்காட்சிகளை உருவாக்கி அதன் மூலம் தங்களுடைய அரசியல் பலத்தை கூட்டிக் கொள்வது இயல்பான ஒரு விஷயம் தான். அந்த வகையில் தளபதி விஜய் தனக்கென, தனது கட்சிக்கு என ஒரு தனி தொலைக்காட்சி சேனலை உருவாக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி உள்ளது.
சீமான் விமர்சனம்.! சைலண்ட் மோடில் விஜய் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை