செம கஷ்டமான டியூன் தந்த யுவன்; அட இதெல்லாம் ஜுஜுபினு அசால்டாக லிரிக்ஸ் எழுதி மிரட்டிய வாலி!
Vaali Vs Yuvan : மெகா ஹிட்டான ஒரு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலுக்கான வரிகளை, அசால்டாக எழுதி யுவன் சங்கர் ராஜாவை மிரட்டி இருக்கிறார் வாலிபக் கவிஞர் வாலி.
Lyricist Vaali
மிகப்பெரிய இசை குடும்பத்தில் இருந்து வந்த இசையமைப்பாளனார் யுவன் சங்கர் ராஜா. தனது அக்கா, அண்ணன், அப்பா மற்றும் சித்தப்பா உள்ளிட்டவர்களை போல தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த கலைஞராக அவர் வலம் வருகிறார். பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிப்பில் வெளியான "அரவிந்தன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் இவர் களமிறங்கினார்.
இப்போது கோலிவுட் உலகின் இளைய இசைஞானியாக அவர் வளம் வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அக்கால திரைப்பட ரசிகர்களுக்கு இளையராஜாவின் இசை எந்த அளவிற்கு ஒரு போதையாக அமைந்ததோ, அது போல இக்கால இளைஞர்களுக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசை ஒரு போதையாகவே இருந்து வருகிறது என்றால் அதில் சற்றும் மிகையல்ல.
yuvan shankar
யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான பல பாடல்கள் மெகா ஹிட் பாடல்களாக மாறியிருக்கிறது. அதேபோல பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான "மன்மத லீலை" என்கின்ற திரைப்படத்தை தவிர, வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களுக்கும் இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. 2007 ஆம் ஆண்டு வெளியான "சென்னை 28" திரைப்படம் தொடங்கி, இந்த 2024 ஆம் ஆண்டு வெளியான "கோட்" திரைப்படம் வரை வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களுக்கும் இசையமைத்தது யுவன் தான்.
தேடி வந்த விஜய்யின் தளபதி 69 பட வாய்ப்பு; ரிஜெக்ட் பண்ணிய சத்யராஜ்? காரணம் என்ன?
venkat prabhu
அந்த வகையில் கடந்த 2011ம் ஆண்டு தல அஜித் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் தான் "மங்காத்தா". இன்றளவும் எப்போது இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்படும் என்று காத்திருக்கும் ரசிகர்கள் பலர் உண்டு. அந்த அளவிற்கு மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்த இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற "வாடா பின்லேடா", "மச்சி ஓபன் தி பாட்டில்" மற்றும் "என் நண்பனே என்னை ஏத்தாய்" போன்ற பாடல்களுக்கு வரிகளில் எழுதியது வாலிபக் கவிஞர் வாலி தான். அதிலும் குறிப்பாக மது ஸ்ரீ மற்றும் யுவன் சங்கர் ராஜா குரலில் ஒலித்த "என் நண்பனே என்னை ஏய்த்தாய்" என்கின்ற பாடலுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டம் எப்போதும் உண்டு.
Mankatha
ஆனால் இந்த பாடலை பொறுத்தவரை இதனுடைய மெட்டு மிகவும் கஷ்டமான முறையில் அமைக்கப்பட்டது. வேகமாக டியூன் நகர்ந்து செல்ல இதற்கு எப்படி வாலி வரிகளை எழுத போகிறார் என்கின்ற ஒரு சந்தேகத்தில் யுவன் சங்கர் ராஜா டியூனை அமைத்திருக்கிறார். ஆனால் இதெல்லாம் எனக்கு ஜூஜூபி மேட்டர் என்று சொல்வது போல.. "முதல்வரி முதல் முழுவதும் பிழை, விழிகளின் வழி விழுந்தது மழை, எல்லாம் உன்னால் தான். இதுவா உந்தன் நியாயங்கள், எனக்கேன் இந்த காயங்கள்.. கிழித்தாய் ஒரு காதல் ஓவியம்" என்று அவர் வேகமாக போட்ட டியூனுக்கும் வரிகளை அணையாசமாக எழுதி வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜாவை வாயடைக்க வைத்திருக்கிறார் வாலிபக் கவிஞர் வாலி.
கதை பிடிக்காமல் நடித்த ரஜினி; ஆனால் படம் பார்த்த பின் இயக்குனரை கட்டியணைத்து கண்கலங்கிய தருணம்!