மாநில விருது வென்ற இயக்குனர்; வீட்டில் இறந்த நிலையில் கண்டுபிடிப்பு - போலீசார் விசாரணை!

By Ansgar R  |  First Published Nov 3, 2024, 11:27 PM IST

Director Death : பிரபல திரைப்பட இயக்குனர் தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் குரு பிரசாத், இன்று நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை பெங்களூருவில் உள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவர் உடலை கைப்பற்றிய பெங்களூரு போலீசார் சந்தேகிக்கின்றனர். கடந்த 8 மாதங்களாக வடக்கு பெங்களூரில் உள்ள மதநாயக்கனஹள்ளி பகுதியில் அவர் வசித்து வந்த நிலையில், அவரது குடியிருப்பில் இருந்து துர்நாற்றம் வீசியதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் போலீசார் வீட்டின் கதவை உடைத்து அவர் உடலை மீட்டுள்ளனர். 

பாலிவுட் பயணம் குறித்த கேள்வி; நச்சுனு ஓப்பனாக பதில் சொன்ன சூர்யா - மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Tap to resize

Latest Videos

undefined

வெளியான சில ஆதாரங்களின்படி, இயக்குனர் குரு பிரசாத், தனது சமீபத்திய படமான ரங்கநாயகா சரியாக ஓடாத நிலையில் அதன் பிறகு அவர் நிதி நெருக்கடியை எதிர்கொண்டார் என்று கூறப்படுகிறது. அது அவருக்கு மிகப்பெரிய நெருக்கடியை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த நிதிச்சுமை அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மாதா (2006) மற்றும் எட்டேலு மஞ்சுநாதா (2009) ஆகிய வெற்றிப் படங்களுக்காக பெரிய அளவில் பாராட்டப்பட இயக்குனர் குரு பிரசாத், கன்னட ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகவும் தோன்றியுள்ளார். இவர் தனது முதல் மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றதை அடுத்து, சமீபத்தில் அவர் மறுமணம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

இறந்த இயக்குனர் குரு பிரசாத், அவரது முதல் படமான மாதா (2006) மூலம் தான் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். அதைத் தொடர்ந்து கன்னட மொழியில் வெளியான எட்டேலு மஞ்சுநாதா (2009) என்ற திரைப்படமும் மக்கள் மத்தியில் அவரை ஒரு சிறந்த இயக்குனராக மாற்றியது. கர்நாடக மாநில திரைப்பட விருதை அவர் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. உருபிரசாத்தின் மிக சமீபத்திய திரைப்படமான ரங்கநாயகா, இந்த 2024ல் வெளியிடப்பட்டது, துரதிர்ஷ்டவசமாக பாக்ஸ் ஆபிஸில் குறைவான வசூல் மட்டுமே அந்த படம் பெற்ற நிலையில் அது அவருடைய நிதி சிக்கல்களை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

இந்த வாரம் நோ எலிமினேஷன்; ஆனா தரமா 6 வெடிகுண்டுகளை வீட்டுக்குள் உருட்டிவிட்ட பிக் பாஸ்!

click me!