"உன் படத்தை முடிக்காம சாகமாட்டேன்" வேடிக்கையாக சொன்ன டெல்லி கணேஷ் - கண்கலங்கிய மணிகண்டன்!

By Ansgar R  |  First Published Nov 10, 2024, 10:50 PM IST

Delhi Ganesh : பிரபல நடிகர் மற்றும் வசனகர்த்தா மணிகண்டன், மறைந்த மூத்த நடிகர் டெல்லி கணேஷ் இல்லத்திற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். 


தமிழ் சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற மிகச் சிறந்த குணசித்திர நடிகர் தான் டெல்லி கணேஷ். விமான படையில் பணியாற்றி வந்த டெல்லி கணேஷ், மேடை நாடகங்கள் மீது உள்ள காதலின் காரணமாக தன்னுடைய பணியில் இருந்து விடுபட்டு டெல்லியை சேர்ந்த ஒரு நாடக சபாவின் சார்பாக பல நாடகங்களில் நடித்திருக்கிறார். பின்னாளில் டெல்லி கணேஷ் என்று அவருக்கு பெயர் வரவும் காரணம் இது தான். கடந்த 1976 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரைப்படத்தின் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கிய டெல்லி கணேஷ், தனது 80 வது வயது வரை அதாவது இந்த 2024 ஆம் ஆண்டு வரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார். 

வில்லன், காமெடியன், குணச்சித்திரம் என்று தன்னிடம் கொடுக்கப்படும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை மிக மிக நேர்த்தியாக செயல்படுத்தும் திறன் கொண்டவர் டெல்லி கணேஷ் என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் நேற்று நவம்பர் 9ஆம் தேதி இரவு அவர் உறங்க சென்றிருக்கிறார், நடுநிசை நேரத்தில் அவரின் உறக்கத்திலேயே உயிர் பிரிந்துள்ளது. தமிழ் திரையுலகமே இன்று சோகத்தில் மூழ்கி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. அவரோடு பணியாற்றிய பெரிய பெரிய நடிகர்களும் டெல்லி கணேஷ் மறைவுக்கு தங்களுடைய இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் குடும்பத்தார்க்கு தன்னுடைய இரங்கல்களை தெரிவித்துள்ளார். 

Tap to resize

Latest Videos

undefined

அஜித்தின் சிட்டிசன்; ஜஸ்ட் மிஸில் தவறவிட்ட தளபதி விஜய் - 23 வருட ரகசியத்தை உடைத்த இயக்குனர்!

பல நடிகர்கள் நடிகைகள் இப்போது நேரடியாக டெல்லி கணேஷ் இல்லத்திற்கு சென்று அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய வருகின்றனர். நாளை நவம்பர் 11ஆம் தேதி அவருடைய இறுதி ஊர்வலமானது நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல பல திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக வளர்ந்து வரும் நடிகர் மணிகண்டன், இளம் வயதில் குறும்படங்கள் எடுத்துக் கொண்டிருந்த காலத்தில் நடிகர் டெல்லி கணேசனின் அறிமுகம் கிடைத்தது குறித்து மனமுருகி பேசியிருக்கிறார். 

மணிகண்டன் இயக்கிய ஒரு குறும்படத்தில் தான் இயல்பாக வாங்கும் சம்பளத்தை விட மிக மிக குறைவாக வாங்கிக்கொண்டு டெல்லி கணேஷ் நடித்ததாகவும் அப்போது ஒரு நாள் அவர் இறந்து விட்டதாக வதந்திகளை பரவிய நிலையில் உடனடியாக அலைபேசி எண் டெல்லி கணேசன் போன் செய்து பேசியிருக்கிறார் அப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது கணேஷ் கவலைப்படாதே உன்னுடைய திரைப்படத்தை முடிக்காமல் நான் சாக மாட்டேன் என்று கூற அந்த நிகழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்து கண்கலங்கி பேசியிருக்கிறார் மணிகண்டன் மிகச் சிறந்த நடிகரான அவரிடம் இருந்து பல விஷயங்களை நான் கற்றுக் கொள்கிறேன் நான் ஒரு குறும்படம் எடுத்த காலத்திலேயே தன்னுடைய தொழில் நேர்த்தியை அவ்வளவு அழகாக வெளிப்படுத்தியவர் அவர் என்றும் புகழாரம் சூட்டியிருக்கிறார் மணிகண்டன்.

2 வருடங்களாக ஒரு ரிலீஸ் கூட இல்ல – கவலை அடைந்த அஜித் ரசிகர்களுக்கு விடாமுயற்சி கொடுத்த குட் நியூஸ்!

click me!