Kanguva Movie Review : சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா முதன்முறையாக நடித்துள்ள படம் கங்குவா. கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் சுமார் 2 ஆண்டு உழைப்புக்கு பின் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது. கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அதில் நிகழ்கால காட்சிகளில் வரும் சூர்யா பிரான்சிஸ் என்கிற கதாபாத்திரத்திலும், வரலாற்று காட்சிகளில் வரும் சூர்யா, கங்குவா என்கிற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் திஷா பதானி நடித்துள்ளார்.
அதேபோல் சூர்யாவுக்கு வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். இதுதவிர நட்டி நட்ராஜ், கருணாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். இப்படம் இன்று உலகமெங்கும் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைகளில் படு பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது. படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்...கங்குவா படம் 2.30 மணிநேரம்; அதில் 2.20 மணிநேரம் Goosebumps தான் - அடித்துச்சொல்லும் ஞானவேல்!
கங்குவா படத்தின் முதல் பாதி ஆவரேஜ் ஆக உள்ளது. சூர்யா தன் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். படத்தில் மிகவும் ஹைலைட்டாக இருப்பது தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை தான். ஆரம்ப காட்சிகள் கிரிஞ்ச் ஆக உள்ளது. பின்னர் வரும் வரலாற்று காட்சிகள் இண்டர்வெல் வரை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறது. இரண்டாம் பாதி பொறுமையை சோதித்தது. அழுத்தமான காட்சி இல்லாதது படத்துக்கு மிகப்பெரிய பின்னடைவு. படத்தில் உள்ள ஒரே பாசிடிவ் இசை தான். மொத்தத்தில் கங்குவா ஆவரேஜ் தான் என பதிவிட்டுள்ளார்.
Average 1st half, Surya pulled with his best again. dsp music stands top of everything🙌..!! starting portions felt cringe followed by engaging grandeur period portions till interval bang. Stage set for 2nd half
— Peter Reviews (@urstrulyPeter)ஒரு போர்வீரன் தன் குலத்தை காக்கும் அற்புதமான கதைக்களம் கொண்ட படம் தான் கங்குவா. பிரம்மிக்க வைக்கும் காட்சிகளுடன் அழகாக கொண்டுசென்றுள்ளனர். டிஎஸ்பியின் மேஜிக் பின்னணி இசையை தூக்கி நிறுத்துகிறது. சூர்யா மிகவும் ஆக்ரோஷமாக நடித்திருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
- An enthralling storyline of a warrior protecting his clan. Loved how beautifully the movie unfolds events with its stunning visuals! Background score was just vibrant with the magic of DSP and finally goes without saying Suriya was just fierce 🔥
— Aiswarya (@AiswaryaSelvar1)கங்குவா படத்தின் முதல் பாதி டீசண்ட் ஆக இருக்கிறது. சூர்யா ஒன் மேன் ஷோவாக படத்தை தோளில் தாங்கி இருக்கிறார். நிகழ்கால காட்சிகள் ஆங்காங்கே காமெடியுடன் உள்ளது. குழந்தை கதாபாத்திரத்துடன் நன்கு கனெக்ட் ஆகி இருக்கிறது. மந்தமான திரைக்கதையால் சில காட்சிகள் டல் அடிக்கிறது. காட்சியமைப்பு மற்றும் சிஜி வேறலெவல். யோலோ, ஃப்யர் பாடல் மற்றும் சண்டை காட்சிகள் தரமாக இருக்கிறது. இண்டர்வெல் எமோஷனலாக உள்ளது. இரண்டாம் பாதியில் உள்ள குறைகளை ஓரமாக வைத்துவிட்டு, படக்குழு எந்த அளவுக்கு சொன்னார்களோ அதை காட்சியமைப்பு மூலம் எட்டிப்பிடித்துள்ளனர். இந்த பிரம்மாண்டத்திற்காகவே இதை திரையில் பார்க்கலாம். சிஜி-யில் எந்த வித மிஸ்டேக்கும் இல்லாமல் ஒவ்வொரு ஃபிரேமும் டாப் நாட்ச் ஆக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
First Half - Quite Decent & Holds well so Far🤝
- What a screen presence of & withholding as one man show in both timelines 🫡🔥
- Present portions were entertaining at parts with Fun Angle & connects emotionally with the Kid character 👌
- Lack of story arc &… pic.twitter.com/QuwEgOm3QQ
கங்குவா ஒரு நல்ல கதையுள்ள ஃபேண்டஸி படமாக இருந்தாலும் அது எடுக்கப்பட்டுள்ள விதம் சுமாராக உள்ளது. சூர்யா சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் உழைப்புக்கு பாராடுக்கள் ஆனால் நடிப்பை மட்டுமே வைத்து படத்தை காப்பாற்றிவிட முடியாது. ஆங்காங்கே சில டீசண்ட் ஆன காட்சிகள் உள்ளன. மற்றபடி படம் மந்தமாக உள்ளது. இந்த மாதிரியான படங்களுக்கு எமோஷனல் கனெக்ட் முக்கியம். ஆனால் அது மிஸ் ஆகி உள்ளது. முதல் பாதியில் திரைக்கதை சற்று விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதியில் அதை கோட்டைவிட்டுள்ளனர். பின்னணி இசை அருமை, ஆனால் சில இடங்களில் மிகவும் சத்தமாக இருக்கிறது. புரொடக்ஷன் வேல்யூ நன்றாக இருக்கிறது. எதிர்பார்த்த அளவு இல்லை என பதிவிட்டுள்ளார்.
is a below par fantasy action film that had a story with good potential but is executed in a clumsy way.
Surya does well in his role and his efforts should be appreciated but it’s hard to save a script like this with just a performance.
The film has a few decent…
கங்குவா படத்தில் சூர்யாவின் நடிப்பு சூப்பர். குறிப்பாக பீரியாடிக் காட்சிகளில் பின்னிபெடலெடுத்துள்ளார். அவரைத் தவிர மற்ற கேரக்டர்கள் ஸ்டிராங் ஆக இல்லை. மற்றபடி மேக்கப், ஆர்ட் ஒர்க், சண்டைக்காட்சிகள் ஆகியவை அருமையாக உள்ளது. பிஜிஎம் சத்தமாக இருக்கிறது. நல்ல புரொடக்ஷன் வேல்யூ உடன் காட்சிகள் பிரம்மிப்படைய வைக்கின்றன. நிகழ்கால காட்சிகளை விட ஹிஸ்டாரிக் காட்சிகள் நன்றாக உள்ளன. நல்ல கதை ஆனால் அதை சொன்ன விதம் இன்னும் பெட்டராக இருந்திருக்கலாம். மொத்தத்தில் இது ஆவரேஜ் படம் என குறிப்பிட்டுள்ளார்.
- Suriya Superb, esp in Periodic Portion. No other character is strong. Kid perf is mixed bag. Makeup, Artwork, Fights gud. Loud BGM. Visually Stunning with Great Prodn Values. Historic portion s better than current. Story Gud, Narration could hv been much btr. AVERAGE!
— Christopher Kanagaraj (@Chrissuccess)இதையும் படியுங்கள்... மிரட்டப்போகும் கங்குவா; பான் இந்தியா மட்டுமல்ல, இனி சூர்யா பான் வேர்ல்ட் ஸ்டார் - ஞானவேல் உறுதி!