MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முதல்வர் சொன்ன ஒற்றை வார்த்தை! அதிருப்தியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்தடுத்து வந்து விழும் கேள்வி!

முதல்வர் சொன்ன ஒற்றை வார்த்தை! அதிருப்தியில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்! அடுத்தடுத்து வந்து விழும் கேள்வி!

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்படாமல் உள்ளதால், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 16 2024, 09:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு மூன்றரை ஆண்டுகளாகியும் இதுதொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

ஆனால், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுவார் என்றால் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல்நீராக போய்விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது என தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினை 2026-ல் எதிர்கட்சித் தலைவராக்க தயார்! தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் இப்படி சொல்ல என்ன காரணம்?

37

இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில்: தலைமைச்செயலகத்தில் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற பள்ளிக் கல்வித்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை. நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் தேர்தலுக்குள் நிறைவேற்ற முதல்வர் அறிவுறுத்தியதாக சமூக ஊடகங்கள், தொலைக்காட்சிகள், நாளிதழ்களில் செய்தி வெளியானது. இது தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இடையில் பழைய ஓய்வூதியத் திட்டம் கானல்நீராக போய்விடுமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:  TNPSC: தேர்வர்களுக்கு குட்நியூஸ்! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

47

கடந்த 2021-ல் திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதும் கொரோனா பேரிடர், முந்தைய ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி, மத்திய அரசின் பாரபட்ச நிதி ஒதுக்கீட்டை சமாளித்து நிதி மேலாண்மை மேற்கொள்வதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இந்த பின்புலத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அமல்படுத்தப்பட்ட சரண் விடுப்பு உரிமை, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ளது. இது இனிமேல் ஒரு போதும் வழங்க இயலாது என்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது. அரசின் நடவடிக்கைகளும் அதைத்தான் உணர்த்துகின்றன.

இதையும் படிங்க:  பழைய ஓய்வூதிய திட்டம்! கைவிரித்த முதல்வர் ஸ்டாலின்? ஏமாற்றப்பட்ட அரசு ஊழியர்கள்! சொல்வது யார் தெரியுமா?

57

சரண் விடுப்புதான் இல்லை என்றால், காலிப்பணியிடங்கள் நிரப்புவதிலும் மெத்தனப்போக்கு நிலவுகிறது. 4 லட்சத்துக்கும் மேல் காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், ஆளும் அரசே பணியாளர்களை தனியார் முகமை மூலம் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தும் போக்கு உள்ளது. இது, சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் முற்றிலும் எதிரான போக்காகும்.
கடந்த நவம்பர் 8ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் அறிவுறுத்தியதாக வந்த செய்தியை அடுத்து, எதிர்க்கட்சித் தலைவர், பாமக தலைவர் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், தேர்தல் வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றாமல் வஞ்சிப்பதாக அறிக்கை வெளியிட்டனர். இதற்கு தமிழக அரசு மற்றும் நிதியமைச்சர் சார்பில் பதில் அறிக்கைகள் வந்துள்ளன.

67

ஆனால், அறிக்கைகள் திமுக தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுவது குறித்து எள்ளளவும் குறிப்பிடாமல் மிகவும் சிரத்தையுடன் தயாரிக்கப்படுகிறது. இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் பல்வேறு நிகழ்ச்சிகளில் 100 சதவீதம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

77

ஆனால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகள் குறித்து தெரிவிக்காமல் அரசின் சார்பில் வெற்று அறிக்கைகள் வெளியாகிறது. வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் போது, இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடும் நிலைக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தள்ளப்படுகின்றனர். எனவே, முதல்வர் இந்த காரணங்களை சீர்தூக்கி பார்த்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், சரண் விடுப்பு , காலிப்பணியிடங்கள் நிரப்புதல் மீதான கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஆசிரியர்
பழைய ஓய்வூதியத் திட்டம்
திமுக

Latest Videos
Recommended Stories
Recommended image1
நிலக்கரி இறக்குமதியில் ரூ.487 கோடி முறைகேடு..? தொழிலதிபர் மீதான அனைத்து வழக்குகளும் ரத்து.. நீதிமன்றம் அதிரடி
Recommended image2
Now Playing
கவர்ச்சி காட்டி பெற்ற மாயாஜால வெற்றி மக்களுக்கு வளர்ச்சியை பெற்று தராது
Recommended image3
Now Playing
நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆய்வு | போதையற்ற சமுதாயத்தை உருவாக்க அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டம் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved