MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • முதல்வர் ஸ்டாலினை 2026-ல் எதிர்கட்சித் தலைவராக்க தயார்! தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் இப்படி சொல்ல என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை 2026-ல் எதிர்கட்சித் தலைவராக்க தயார்! தமிழக அரசு ஊழியர்கள் சங்கம் இப்படி சொல்ல என்ன காரணம்?

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நிதிச் சிக்கல்களை காரணம் காட்டி அரசு இழுத்தடிப்பதாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

3 Min read
Author : vinoth kumar
| Updated : Nov 10 2024, 01:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

கடந்த 2001ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை ஜெயலலிதா கையில் எடுத்தார். தமிழக அரசின் வருமானத்தில் பெரும் பங்கு அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களுக்கு மட்டுமே செல்கிறது எனும் உண்மையை முதன் முதலில் அம்பலப்படுத்தியது ஜெயலலிதா தான். இதனையடுத்து, தமிழகத்தில் 2003ம் ஆண்டுக்கு பின் அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு, பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

29

இதில், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்பது உட்பட பல்வேறு பாதகமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.  எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. ஆனால், எடப்பாடி பழனிசாமியும் ஜெயலலிதா போன்றே அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். 

39

இதனையடுத்து, அனைத்து அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடினர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் முக்கிய கோரிக்கையாக இதனை முன்வைத்து வந்தனர். இந்நிலையில், திமுக தேர்தல் வாக்குறுதியில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தார். ஆனால் ஆட்சிக்கு மூன்றரை ஆண்டுகளாகியும் இதுதொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

49

ஆனால், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதற்கு அதிகம் செலவாகும் என்பதால் இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு கூறி வருகிறது. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசுவார் என்றால் அதை அவருக்கு பரிசளிக்க தயாராக இருக்கிறோம் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

59

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.தமிழ்ச்செல்வி, பொதுச் செயலாளர் சு.ஜெயராஜராஜேஸ்வரன் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடந்த காலங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராடிய இடத்திற்கெல்லாம் வந்து நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 'தேனாறும், பாலாறும் ஓடும்' என்ற வகையில் வாக்குறுதிகளை அள்ளிவிட்ட இன்றைய தமிழக முதல்வர். 2021-ல்  ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வுதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்திருந்தார். 

69

ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இவர்கள் ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் 24 மாதகால அகவிலைப்படியை முடக்கினார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெற்று வந்த ஊக்க ஊதிய உயர்வை முடக்கினார்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆண்டாண்டு காலமாக பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை முடக்கினார்கள். கருணை அடிப்படையிலான பணிநியமனத்தை 25%-லிருந்து 5%-மாக குறைந்ததன் மூலம் கருணை அடிப்படையிலான பணிநியமனத்தையும் முடக்கினார்கள். பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பாமல் அப்பணியிடங்களை ஒப்படைத்ததற்கான எவ்விதமான அரசாணைகளும் வெளியிடாமல் மௌனமாக பணியிடங்களை மொத்தப் பணியிட எண்ணிக்கையிலிருந்து முடக்கி எதிர்கால இளைஞர்களின் அரசுப் பணி கனவை முடக்கினார்கள்.

79

இவர்களை ஆட்சிக்கட்டிலில் வைத்து அழகு பார்த்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அனைத்து உரிமைகளையும் பறித்தது தான் இவர்களின் மூன்றாண்டு கால சாதனையாக உள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்னர் தமிழக முதல்வர் திருமண நிகழ்வொன்றில் தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்திருந்தார். அதைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தி இருந்தோம். தற்போது தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை ஆய்வு கூட்டத்தில் தமிழக முதல்வர் நிதிசாராத கோரிக்கைகளை மட்டுமே நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக தகவல் வருகிறது. புதிய ஓய்வூதியத்திட்டம் உள்ளிட்ட நிதிசார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளதன் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு துரோகம் இழைத்துள்ளார். இதை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

89

உண்மையிலேயே நிதி நிலை மோசமாக உள்ளது என்றால், நிதி நிலை சரியாகும் வரை எங்ளுக்கு ஊதியம் வேண்டாம் என்று தமிழக முதல்வரும், அவரின் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர் சகாக்களும் அறிவிப்பார்களா? நிதிநிலை சரியாகும் வரை எங்களுக்கான ஓய்வூதியம் வேண்டாம் என்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவிப்பார்களா? நிதி நிலை மோசம் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்திய ஆட்சிப் பணியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் உயர் அலுவலர்கள் தங்கள் ஊதியத்திலிருந்து 10% விட்டுக் கொடுப்பார்களா? என்ற கேள்வியை முன்வைக்க விழைகிறோம்.

99

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட சிபிஎஸ் சந்தா தொகை தமிழக அரசால் தவறுதலாக கையாளப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற பகிரங்க குற்றச்சாட்டை முன்வைக்கின்றோம். போக்குவரத்துத் துறை ஊழியர்கள் எப்படி தற்போது ஓய்வூதியப் பலன்கள் ஏதும் கிடைக்காமல் நடுத்தெருவில் விடப்பட்டார்களோ. அதே நிலைமை தான் அரசு ஊழியர்கள். ஆசிரியர்களுக்கும் வரப்போகிறது. இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. எதிர்கட்சித் தலைவராக இருந்தால் மட்டுமே அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தமிழக முதல்வர் அவர்கள் சந்தித்துப் பேசுவார் என்றால் 2026-இல் அதை அவருக்கு பரிசளிக்க அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தயாராக இருக்கிறோம் என்பதை மூலம் தெரிவித்துக் இதன் கொள்ள கடமைப்பட்டுள்ளோம். 10.11.2024ல் எங்களது மாநில செயற்குழு கரூரில் நடைபெற உள்ளது. அதில் தீவிரமாக போராட்டங்கள் முன்னெடுப்பது தொடர்பாக விவாதித்து அறிவிக்க உள்ளோம் என தெரிவித்துள்ளனர். 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திமுக
பழைய ஓய்வூதியத் திட்டம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆத்தாடி.. வெயில் இப்படி பொளக்குதே.. மழைக்கும் வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
Recommended image2
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
Recommended image3
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved