Cuban Film Festival Chennai : சென்னையில் உள்ள பிரபல ஏவிஎம் நிறுவனத்தின் ஆடிட்டோரியத்தில் இன்று நவம்பர் 15ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை கியூபா திரைப்பட விழா நடைபெறுகிறது.
உலக அளவில் பல நாடுகளில் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு, அவை சர்வதேச அரங்கில் ஒளிபரப்பப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய திரைப்படங்களும், குறிப்பாக தமிழ் மொழி திரைப்படங்கள் இந்த உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பப்படுவது அனைவரும் அறிந்ததே. பன்னாட்டு விருதுகளை பெற்ற திரைப்படங்களில் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் மொழியை பொறுத்தவரை பெரிய அளவில் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் செயல்பட்டு வரும் கியூபா நாட்டின் தூதரகத்துடன் இணைந்து, இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் என்கின்ற நிறுவனம், தற்பொழுது கியூபா திரைப்பட விழா 2024ஐ சென்னையில் நடத்தி வருகிறது. சென்னை சர்வதேச திரைப்பட விழா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது குறிப்பிடத்தக்கது.
உயிரும், உலகும் நல்லா வளந்துட்டாங்கப்பா; குஷியாக குழந்தைகள் தினத்தை கொண்டாடிய நயன்தாரா!
இன்று நவம்பர் 15 ஆம் தேதி தொடங்கிய இந்த விழா வருகின்ற நவம்பர் மாதம் 17ஆம் தேதி வரை சென்னை அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள ஏவிஎம் நிறுவனத்தின் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கான துவக்க விழாவில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி திரு. எஸ் விஜயகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று கியூபன் சினிமாவை பெருமைப்படுத்தும் வகையில் குடும்ப உறவுகளை ஆழமாக பிரதிபலிக்கும் "கான்டிகோ பான் ஒய் செபொல்லா" என்கின்ற திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இனிவரும் இந்த இரண்டு நாட்களிலும் கியூபன் நாட்டு திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளது.
குறிப்பாக நாளை நவம்பர் 16ஆம் தேதி விவா கியூபா மற்றும் தி மேஜர் போன்ற திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது. நவம்பர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை ஏ.வி.எம் ஆடிட்டோரியம், ஆற்காடு சாலை, விருகம்பாக்கம், சென்னையில் இந்த நிகழ்ச்சி நடைபெறும். கியூபா நாட்டின் கலாச்சாரம் மற்றும் அதன் அற்புதமான கதைகளை தெரிந்துகொள்ள விரும்புவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அஜித் ஸ்டைலில் ஒரு ஸ்டண்ட்; ARM இயக்கத்தில் அடுத்த பட பணிகளில் தீவிரம் காட்டும் சிவகார்த்திகேயன்!