"கூட்டத்தாடி ரெண்டுபட்டா ஊருக்கே கொண்டாட்டம்" நயன் தனுஷ் சர்ச்சை - நச் பதில் கொடுத்த ஆர்.ஜே. பாலாஜி!

By Ansgar R  |  First Published Nov 17, 2024, 11:22 PM IST

RJ Balaji : நயன்தாரா மற்றும் தனுஷ் இடையே நடக்கும் பிரச்சனை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் பிரபல நடிகர் ஆர்.ஜே.பாலாஜி.


பிரபல நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவரும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவனின் காதல் திருமணம் குறித்த ஒரு தொடர் Netflix தலத்தில் வெளியாகவுள்ளது. அது சம்மந்தமாக பல வீடியோக்களை கூட நம்மால் அடிக்கடி இணையத்தில் பார்க்கமுடிகிறது. இந்த சூழலில் Netflixல் வெளியாகவுள்ள அந்த தொடரில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் முதன் முதலில் சந்தித்துக்கொண்ட நானும் ரவுடி தான் என்ற படத்திலிருந்து சில காட்சிகளை பயன்படுத்த அவர்கள் முடிவு செய்தார்கள். இந்த சூழலில் தான் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில், நடிகர் தனுஷ், 3 வினாடி வீடியோவிற்கு 10 கோடி கேட்டு நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். 

தனுஷ் அப்படி ஒரு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் தான் வெடித்தது ஒரு சர்ச்சை. நடிகர் தனுஷை கண்டித்து ஒரு 3 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார் நயன்தாரா. அவருக்கு ஆதரவாக அவரது கணவர் விக்னேஷ் சிவனும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இது போதாது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாரா வெளியிட்ட அந்த பதிவை லைக் செய்து அவருக்கு ஆதரவு தெரிவித்தனர் பிரபல நடிகைகள், ஸ்ருதிஹாசன், அனுபமா, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் நஸ்ரியா. இவர்கள் அனைவரும் தனுஷுடன் நாயகிகளாக நடித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

undefined

"திடீர் தளபதி இம்சை தாங்கலப்பா" ரஜினியின் மைண்ட் வாய்ஸ் இதுதானாம் - கொளுத்திப்போட்ட பிரபலம்!

கடந்த சில நாள்களாகவே இந்த பிரச்சனை தான் தமிழ் திரையுலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. நடிகைகள் பலரும் நயன்தாராவுக்கு ஆதவராக நிற்கும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் தனுஷுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். சில பிரபல YouTube சேனல்களில் கூட, தனுஷ் மீது தவறு இல்லை என்று தான் கூறி வருகின்றனர். இதற்கிடையில் இன்று ஒரு பேட்டியில் பேசிய பாடகி சுசித்ரா, தனுஷ் தனக்கு பிடிக்காதவர்கள் இமேஜை துடைக்கவேண்டும் என்று ஆசைப்படுபவர். அவர் ஒரு சைக்கோ என்றெல்லாம் பேசி, தனுஷ் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். 

இந்நிலையில் இன்று ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜியிடம் நயன்தாரா மற்றும் தனுஷ் விவகாரம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பளிச்சென பதில் அளித்த அவர்... "ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம். அது போல கூட்டத்தாடி ரெண்டுபட்டால் ஊருக்கே கொண்டாட்டம். தனுஷ் மற்றும் நயன்தாரா ஆகிய இருவரும் மிக சிறந்த நடிகர்கள். பல விஷயங்கள் தெரிந்தவர்கள். கட்டாயம் இந்த பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வார்கள். இதில் மக்கள் செய்வதற்கு ஒன்றுமே இல்லை" என்று கூறியுள்ளார். 

கையில் உலக்கையுடன் நயன்தாரா; ரணகளத்துக்கு மத்தியில் வெளியான புது பட அப்டேட்!

click me!