கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தென்னிந்திய பிரபலங்கள்! 10-ஆவது இடத்தில் அஜித்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

First Published Jan 3, 2024, 7:18 PM IST

இந்த ஆண்டு உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 தென்னிந்திய நடிகர்கள் யார் யார்.. என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

ஒவ்வொரு ஆண்டும், கூகுள் நிறுவனம்... கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள், நடிகைகள், அதிகம் படிக்கப்பட்ட செய்தி என பல்வேறு பட்டியல்களை தொகுத்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு, அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகர்கள் யார் என்பது பற்றி பார்க்கலாம்.
 

இந்த லிஸ்டில் 10-ஆவது இடத்தில் உள்ளவர் தல அஜித் தான். இவர் நடிப்பில் 2023-ஆம் ஆண்டு துவக்கத்திலேயே பொங்கலை முன்னிட்டு 'துணிவு' திரைப்படம் வெளியானது. எனவே அஜித்தை பற்றியும், அவர் அடுத்ததாக தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி' படம் குறித்த தகவல்களை தெரிவித்து கொள்ள பல ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். 

டார்க் காமெடி படத்தில் நடிகர் சத்யராஜுடன் இணையும் இளம் நடிகர் வெற்றி!

இந்த பட்டியலில், 9-ஆவது இடத்தில் உள்ளார் சிரஞ்சீவி. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சிரஞ்சீவி நடிப்பில் கடந்த ஆண்டு, வால்டர் வீரய்யா மற்றும் போலா ஷங்கர் ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. எனவே இந்த படங்கள் பற்றி ரசிகர்கள் பலர் அதிகம் தேடியுள்ளனர்.
 

8-ஆவது இடத்தில், பிரபல நடிகர் ராம் சரண் உள்ளார். நடிப்பில் 2023 ஆம் ஆண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை என்றாலும், பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இவர் நடித்து வரும் 'கேம் சேஞ்சர்' பற்றிய பற்றி ரசிகர்கள் அதிகம் தேடினர்.

சூர்யா திருமணத்திற்கு விஜயகாந்தை அழைக்க சென்ற சிவகுமார்! வர முடியாது என கூறிய கேப்டன்.. ஏன் தெரியுமா?

இந்த லிஸ்டில் 7-ஆவது இடத்தை பிடித்துள்ளார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா நடிப்பிலும் கடந்த ஆண்டு ஒரு படம் கூட வெளியாகவில்லை. எனினும் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா பற்றியும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ள வாடிவாசல் படம் பற்றிய தகவல்கள் அதிகம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் தேடப்பட்டது. 
 

டாப் 10 லிஸ்டில்... 6-ஆவது இடத்தை பிடித்துள்ளவர், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தான். மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற 'சர்க்காரு வாரி பட்டா' படத்திற்கு பின், த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகும் 'குண்டூர் காரன்' படத்தில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 2023-ஆம் ஆண்டு மகேஷ் பாபு நடிப்பில் படங்கள் வெளியாகவில்லை என்றாலும் 'குண்டூர் காரன்' படத்திற்காக மகேஷ் பாபுவின் பெயர் சமூக வலைத்தளத்தில் அதிகம் தேடப்பட்டுள்ளது.

துபாயில் இருந்து வந்த கையேடு... விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்திய சரத்குமார்! வைரலாகும் புகைப்படம்
 

இந்த லிஸ்டில் 5-ஆவது இடத்தில பிரபல நடிகர் தனுஷ் உள்ளார். கடந்த ஆண்டு வெளியான 'வாத்தி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி 100 கோடி வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திற்காக, தனுஷின் பெயர் அதிகம் கூகுளில் தேடப்பட்டுள்ளது.

இந்த லிஸ்டில் 4-ஆவது இடத்தில் உள்ளது பாகுபலி நாயகன் பிரபாஸ் தான். பிரபாஸ் நடிப்பில் 2023 ஆம் ஆடு வெளியான 'ஆதிபுருஷ்' கடுமையான விமர்சனங்களுக்கு ஆளத்தால் இவரது பெயர் அதிகம் தேடப்பட்டது. அதே போல் சமீபத்தில் வெளியான சிலர் படத்திற்காகவும் பிரபாஸ் பெயர் கூகுளில் அதிகம் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.

ராதிகா நடித்து வரும் 'பொன்னி சி/ஓ ராணி' சீரியல் நடிகருக்கு திருமணம் முடிந்தது! வாழ்த்தும் ரசிகர்கள்!

டாப் 10 லிஸ்டில்... 3-ஆவது இடத்தை பிடித்துள்ளார் 'புஷ்பா' பட நாயகன் அர்ஜுன். புஷ்பா திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகி இப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர் அல்லு அர்ஜுன். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியான நிலையில், அல்லு அர்ஜுன் பெயரும் அதிகம் அடிபட்டது.
 

அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய பிரபலங்கள் லிஸ்டில் இரண்டாம் இடத்தில் உள்ளவர்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான். 2023-ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து, ஹிஸ்டாரிக் சாதனை படைத்தது குறைப்பிடத்தக்கது.

'பிச்சைக்காரன்' பட ஹீரோயின்... சட்னா டைட்டசுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!
 

Thalapathy Vijay

டாப் 10 லிஸ்டில்... அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய பிரபலங்களில் முதல் இடத்தில் இருப்பவர் தளபதி விஜய் தான். 2023 -ஆம் ஆண்டு மட்டும் விஜய் நடிப்பில் துணிவு மற்றும் லியோ ஆகிய இரண்டு படங்கள் வெளியானது. அதே போல், அரசியல் ஈடுபாடு காரணமாகவும் விஜய்யின் பெயரை பலர் தேடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!