ஓய்வு குறித்து தோனி யாரிடமும் கூறவில்லை – சிஎஸ்கே சிஇஓ காசி விஸ்வநாதன்!

First Published May 20, 2024, 2:47 PM IST

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஓய்வு குறித்து இதுவரையில் யாரிடமும் அறிவிக்கவில்லை. அவரது முடிவு குறித்து விரைவில் சொல்வார் என்று சிஎஸ்கேயின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.

MS Dhoni IPL Retirement

இந்திய அணிக்கு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று கொடுத்து எம்.எஸ்.தோனி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து ஐபிஎல் தொடரிலிருந்து மட்டும் விளையாடி வந்தார். தற்போது 42 வயதாகும் தோனி, ஐபிஎல் தொடரிலிருந்து இப்போது ஓய்வு பெறுவார் அடுத்த ஆண்டு ஓய்வு பெறுவார் என்ற பேச்சு அடிபட்டு வருகிறது.

CSK CEO Kasi Viswanathan

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் போதும் கூட இந்த சீசன் தான் கடைசி சீசனா என்று கேள்வி எழுப்பிய போது நீங்களாக முடிவு பண்ணிட்டீங்களா என்று சிரித்துக் கொண்டே கேட்டார். இதன் மூலமாக தோனி அடுத்த சீசனிலும் விளையாடுவார் என்று கூறப்பட்டது.

Latest Videos


MS Dhoni

அதன்படி இந்த சீசனிலும் தோனி விளையாடினார். ஆனால், சீசன் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். தோனி விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விளையாடினார். இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 7ல் வெற்றியும், 7ல் தோல்வியும் அடைந்து பிளே ஆஃப் இழந்து பரிதாபமாக வெளியேறியது.

IPL 2024

ஆனால் கடந்த ஆண்டு 5ஆவது முறையாக சாம்பியனானது. இந்த நிலையில் தான் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 61ஆவது லீக் போட்டி தான் தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி என்று செய்தி வெளியாகி வந்தது.

MS Dhoni Retirement

ஆனால், இது குறித்து சுரேஷ் ரெய்னாவிடம் கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக இல்லை என்றார். இந்த நிலையில், தான் தோனி அடுத்த சீசனிலும் இடம் பெற்று விளையாடுவார் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தோனியின் ஓய்வு குறித்து கூறியுள்ளார்.

click me!