
தீபாவளி வர இன்னும் சில நாட்களே உள்ளன. தீபாவளி பண்டிகையை நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். தீபாவளி அன்று நண்பர்கள் குடும்பத்தினருடன் பட்டாசு வெடித்து, இனிப்புகள் மற்றும் பல வகையான உணவுகளை சாப்பிட்டு மகிழ்ச்சிகரமாக கொண்டாடுவார்கள்.
தீபாவளி 2024 எப்போது?
இந்த 2024 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையானது தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் அன்றைய தினம் பொது விடுமுறையாகும். சில மாநிலங்களில் தீபாவளி அன்று விரதத்தை கடைப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகை கொண்டாட சரியான நேரம்:
தீபாவளி பண்டிகையானது அக்டோபர் 31ஆம் தேதி வியாழன் கிழமை அன்று வருகிறது. எனவே இந்நாளில் நல்ல நேரம் பார்த்து இறைவனை வழிபாடு செய்யவும். குறிப்பாக, அந்நாளில் ராகு காலம் தவிர்த்து, பூஜை செய்து வழிபட உகந்த நேரமாக கருதப்படுகிறது. பூஜைகள் செய்து முடித்த பிறகு விளக்கேற்றி பட்டாசு வெடித்தால் தீய சக்திகள் அகற்றப்படுவதாக நம்பிக்கை.
தீபாவளி பண்டிகையின் புராணக்கதைகள்:
தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கு பல புராண கதைகள் உள்ளன. இவற்றில் மிகவும் பிரபலமான கதைகளில் ஒன்று தான் கிருஷ்ணர் நரகாசுரர் என்ற அசுரனை வதம் செய்த நாளை தான் நாம் பட்டாசு வெடித்து தீபாவளியாக கொண்டாடி வருகிறோம்.
அதுவே ராமாயணத்தின் படி ராமர் ராவணனை வென்று நாளாக கொண்டாடப்படுகிறது. அதாவது ராமர் வனவாச முடித்து சீதா தேவியுடன் அயோத்திக்கு திரும்பிய நாள். அவர்களை வரவேற்கும் விதமாக அயோத்தி முழுவதும் தீபங்கள் ஏற்றி பட்டாசு வெடித்து கொண்டாடியதாக சொல்லப்படுகிறது. இப்படியாக தீபாவளி வந்தது என்று ஒரு கதையும் உள்ளது.
இதையும் படிங்க: தீபாவளி குரு புஷ்ய யோகம் 2024 – தீபாவளிக்கு தங்கம் வாங்குனா நல்லதா? எப்போது நகை வாங்கணும்?
தீபாவளி அன்று லட்சுமி தேவியை ஏன் வழிபட வேண்டும்?
புராணங்கள் படி, பூமி முழுவதும் இருள் சூழ்ந்து இருந்தது அப்போது வானத்திலிருந்து தாமரை மீது அமர்ந்தபடியே லட்சுமிதேவி பூமிக்கு வந்ததாக சொல்லப்படுகிறது. லட்சுமி தேவியால் பூமி முழுவதும் வெளிச்சம் பரவியது. லக்ஷ்மி தேவி அவதரித்த இந்த நாள் தான் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது என்றும் புராணங்கள் சொல்லுகின்றன. எனவேதான் தீபாவளி என்று லட்சுமி தேவியை வரவேற்கும் விதமாக வீட்டை சுத்தம் செய்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.
தீபாவளி சிறப்புகள்:
குருபகவான் ஞானத்தை அருள்பவர். குரு பகவானுக்கு உரிய வியாழக்கிழமை நாளில் சித்திரை நட்சத்திரமும் இணைந்து இந்த ஆண்டு தீபாவளி வருவதால் நல்ல காரியங்களை தொடங்குவதற்கான மங்களகரமான நாளாக கருதப்படுகிறது. அதுவும் மங்களகரமான சுப முகூர்த்த நாளுடன் வருவதால் இந்நாளில் மங்களப் பொருட்களை தாராளமாக வாங்கலாம். சுபகாரியங்களையும் செய்யலாம்.
இதையும் படிங்க: தீபாவளி விருந்தாக திரைக்கு வர உள்ள படங்களின் முழு பட்டியல் இதோ!!