Bharat Gaurav Train
நாட்டின் மிகப்பெரிய சேவை நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ரயில்வே அண்மை காலமாக பயணிகளுக்கு பல அசத்தலான திட்டங்கள் வாயிலாக சேவை செய்து வருகிறது. அந்த வகையில் ரயில்வே மூலமாக சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடிவு செய்த ரயில்வே வாரியம் பாரத் கௌரவ் யாத்ரா என்ற பெயரில் டூர் பேக்கேஜ்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒரு அசத்தலான டூர் பேக்கேஜை இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
Tourist Train
தென்இந்தியாவில் உள்ள கோவில்களை நீங்கள் சுற்றி பார்க்க வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டிருந்தால் இந்த பேக்கேஜ் உங்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். மொத்தமாக 5 இரவுகள், 6 பகல் கொண்ட டூர் பேக்கேஜ் வருகின்ற 25ம் தேதி தொடங்குகிறது.
Bharat Gaurav
சுற்றி பார்க்கும் இடங்கள்
25ம் தேதி தொடங்கும் இந்த பேக்கேஜில் முதலாவதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க தலங்களை பார்க்கிறோம். பின்னர் திருவனந்தபுரம் பத்மநாபபுரம் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகிய முக்கிய தலங்களுக்கு நாம் அழைத்துச் செல்லப்படுகிறோம்.
Tourist Train
செய்து கொடுக்கப்படும் வசதிகள்
டூர் பேக்கேஜில் பதிவு செய்யும் நபர்களுக்கு ரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வொரு பகுதிக்கும் செல்வதற்கான போக்குவரத்து வசதி, ஓட்டல்கள், உணவு, சுற்றுலா பயணிகளை வழிநடத்த கைடு மற்றும் இன்சூரன்ஸ் போன்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.
Bharat Gaurav Yatra
அரசு மானியம்
இந்த பேக்கேஜ்க்கு நபர் ஒருவருக்கு ரூ.15000 கட்டணமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகா பாரத் கௌரவ் தக்ஷினா யாத்ரா என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு சலுகையாக ஒவ்வொரு பயணிக்கும் ரூ.5000 மானியமாக அரசே வழங்குகிறது. இதனால் நமக்காகும் செலவு ரூ.10000 மட்டுமே.
இந்த பேக்கேஜில் டூர் செல்ல விரும்பும் நபர்கள் IRCTCயின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SZKBG20 என்ற இணைய பக்கத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்.