காபியில் இதை சேர்த்து குடித்தால் கொழுப்பு வேகமாக கரையுமா? உண்மை என்ன?

First Published Oct 17, 2024, 5:02 PM IST

காபியில் இலவங்கப்பட்டை பொடியைச் சேர்த்து குடித்தால்.. உண்மையிலேயே உடல் எடை குறையுமா..? இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இப்போது தெரிந்து எடுத்துக்கொள்வோம்…

Cinnamon In Coffee

உடல் எடை குறைக்க நம்மில் பலரும் பல வழிகளை பின்பற்றுகிறோம். காலையில் டீடாக்ஸ் பானங்களை குடிப்பதன் மூலம் விரைவாக உடல் எடை குறையும் என்று பலர் நம்புகிறார்கள். காபி குடித்தாலும் எளிதாக உடல் எடை குறையும்.. அதில் இலவங்கப்பட்டை பொடியைச் சேர்த்தால் போதும் என்று சிலர் கூறுகிறார்கள்.

இதை சமீப காலமாக பலர் நம்புகிறார்கள். சரி, இதில் எவ்வளவு உண்மை..? காபியில் இலவங்கப்பட்டை பொடியைச் சேர்த்து குடித்தால்.. உண்மையிலேயே உடல் எடை குறையுமா..? இது குறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Cinnamon In Coffee

நம்மில் பலருக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். காபியில் இலவங்கப்பட்டை பொடியைச் சேர்ப்பதன் மூலம் அது உடலில் தேங்கியுள்ள கொழுப்பையும் கரைக்கச் செய்யும் என்று பலர் நம்புகிறார்கள். இலவங்கப்பட்டை பொடி கொழுப்பைக் கரைக்குமா? ஆராய்ச்சியின் படி.. நம் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை இந்த இலவங்கப்பட்டை கரைக்குமா இல்லையா என்பது நம் உடலில் உள்ள கொழுப்பைப் பொறுத்து இருக்கிறதாம்.

சாயங்காலம் 'டீ' குடிக்கலாம்... ஆனா 'இந்த' பிரச்சனை இருக்கவங்க குடித்தால் டேஞ்சர்!!

Latest Videos


Cinnamon In Coffee

ஒரு நாளைக்கு 1.5 கிராமுக்கு குறைவான இலவங்கப்பட்டை அளவுகளை (சுமார் அரை டீஸ்பூன்) எடுத்துக் கொண்டால், இடுப்பு சுற்றளவு 1.68 செ.மீ குறைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு நாளைக்கு 1.5 கிராமுக்கு மேல் எடுத்துக் கொள்வது பெரிய விளைவை ஏற்படுத்தாது.

இலவங்கப்பட்டை பொதுவாக சமையல், உணவில் மசாலாவாகப் பயன்படுத்தும்போது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், இலவங்கப்பட்டை அனைவருக்கும் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல.

சிலருக்கு இலவங்கப்பட்டையால் செரிமான அசெளகரியம் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும். இலவங்கப்பட்டையில் உள்ள பொருட்களில் ஒன்றான Coumarin சிலருக்கு கல்லரலுக்கு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும். எனவே.. அனைவரும் உடல் எடை குறைக்க இலவங்கப்பட்டையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.

Cinnamon In Coffee

உடல் எடையை குறைக்க காபி உதவுமா?

உடல் எடை குறைக்க காபியும் உதவும் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் இதை நியாயப்படுத்த இன்னும் நல்ல ஆதாரங்கள் இல்லை. உடல் எடை குறையும் வாய்ப்பு இருக்கிறது, ஆனால்.. மிகக் குறைவாகவே குறையும். அத்தகைய காபியில் இலவங்கப்பட்டை பொடியையும் சேர்ப்பதன் மூலம் உடல் எடை குறையும் வாய்ப்புகள் மிகக் குறைவு என்று சொல்லலாம்.

ஒரு மாதம் சாதம் சாப்பிடலன்னா உடல் எடை குறையுமா? என்னலாம் நடக்கும்?

Cinnamon In Coffee

காபியை சாதாரணமாக குடித்தாலும் சரி, இலவங்கப்பட்டை பொடியைச் சேர்த்து குடித்தாலும் சரி எளிதாக உடல் எடை குறைவது சாத்தியமில்லை. இவற்றைக் குடித்து, உடல் எடை குறைக்க வேண்டும் என்பது ஒரு கட்டுக்கதை தான். முதலில் வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஆரோக்கியமான சமச்சீரான உணவை எடுத்துக்கொள்வதுடன், தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் மட்டுமே எளிதாக உடல் எடை குறையுமாம். 

click me!