ஒரு மாதம் வெள்ளை அரிசி சாப்பிடாமல் இருப்பதால் ஏற்படும் நன்மைகள்
எடை குறைக்க உதவுகிறது: ஆம், ஒரு மாதம் வெள்ளை அரிசி சாப்பிடுவதை நிறுத்தினால், நீங்கள் எடை குறைவீர்கள். ஏனெனில் வெள்ளை அரிசியில் நார்ச்சத்து மிகக் குறைவு. இதனால் வெள்ளை அரிசி மிக விரைவாக ஜீரணமாகிவிடும். மேலும் விரைவில் பசி எடுக்கும். மற்ற தானியங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். உங்கள் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கும். அதே நீங்கள் வெள்ளை அரிசியை சாப்பிட்டால் விரைவில் எடை அதிகரித்துவிடும்.
இரத்த சர்க்கரை அளவுகள் கட்டுப்படுத்தப்படும்: வெள்ளை அரிசியில் கிளைசெமிக் இன்டெக்ஸ் மிக அதிகமாக உள்ளது. அதாவது இதைச் சாப்பிட்டால் உங்கள் இரத்த சர்க்கரை அளவுகள் வேகமாக அதிகரிக்கும். அதனால்தான் நீரிழிவு நோயாளிகள் இதைச் சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள், சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: வெள்ளை அரிசியில் நார்ச்சத்து இல்லை. எனவே இதைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆனால் மற்ற தானியங்களில் உள்ள நார்ச்சத்து உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.