முழு தானியங்கள்
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது பாஸ்தா, ரொட்டி மற்றும் அரிசி போன்ற மாவுச்சத்துக்களை குறைக்க வேண்டும் என்று பலர் நினைக்கலாம். ஆனால் அது உண்மை இல்லை., குறிப்பாக நாம் பெரும்பாலான நேரங்களில் முழு தானியங்களைத் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் முழு கோதுமை பாஸ்தா, பிரவுன் ரைஸ் மற்றும் குயினோவா போன்றவற்றில் நார்ச்சத்து உள்ளது, , எனவே புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுடன் இந்த உணவுகளை உட்கொள்வது உடல் எடையை குறைக்க நல்ல பலனளிக்கும்.
ஆப்பிள்கள்
காய்கறிகளைப் போலவே, பழங்களும் ஆரோக்கியமான எடை இழப்பு திட்டத்திற்கும் முக்கிய அம்சமாகும். அவற்றின் அதிக நீர் உள்ளடக்கம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளில் குறைந்த கலோரிகளே உள்ளன. இது எடையைக் குறைக்க உதவுவதில் பங்கு வகிக்கிறது..