ரேஷன் கடை பாமாயில் உடலுக்கு ஆபத்தானதா? உண்மையை உடைத்த மருத்துவர்!

First Published Oct 17, 2024, 2:15 PM IST

பாமாயில் உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய்களில் ஒன்று. இதில் வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆனால் பாமாயில் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று பொதுவான கருத்து நிலவுகிறது. இதுகுறித்து மருத்துவர் அளித்த விளக்கத்தை தற்போது பார்க்கலாம். 

Palm Oil

சமையலுக்கு பயன்படுத்தப்படும் மிக முக்கியமான எண்ணெய்களில் பாமாயிலும் ஒன்று. குறிப்பாக பல நூற்றாண்டுகளாக மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் சமையல் எண்ணெயாக பயன்படுத்தப்பட்டது. ஆப்பிரிக்க எண்ணெய் பனை அல்லது சிவப்பு எண்ணெய் பனை என்று பிரபலமாக அறியப்படும் இந்த மரம், மலேசியா, இந்தோனேஷியா மற்றும் நைஜீரியா போன்ற பல ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.

இந்த மரத்தின் பழத்தில் இருந்து தயாரிப்படுவது தான் பாமாயில். மலேசியா, இந்தோனேசியா மற்றும் பல ஆப்பரிக்க நாடுகள் பாமாயில் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இந்தியாவில், 1886 இல் கொல்கத்தாவில் உள்ள தேசிய ராயல் தாவரவியல் பூங்காவில் எண்ணெய் பனை மரம் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Palm Oil Health Benefits

கேரளா மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் எண்ணெய் பனை மரங்களை அதிக அளவில் பயிரிடப்பட்டதால் இந்தியாவிலும் பாமாயில் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியது. தமிழ்நாட்டிலும் ரேஷன் கடைகளில் மலிவான விலைக்கு இந்த பாமாயில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கணிசமான மக்கள் பாமாயிலை சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

சமையல் மட்டுமின்றி, சோப்புகள் மற்றும் ஷாம்புகள் போன்ற தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள், பதப்படுத்தப்பட்ட தின்பண்டங்கள் எனபலவற்றிலும் பாமாயில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சரி, இந்த பாமாயில் எண்ணெய்யை சமையலுக்கு பயன்படுத்தலாமா? அது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பாமாயிலின் ஆரோக்கிய நன்மைகள்

பாமாயில் எண்ணெய் பனை மரங்களின் பழங்களின் கச்சா கூழில் இருந்து எடுக்கப்படுகிறது. பீட்டா கரோட்டின் (வைட்டமின் ஏ முன்னோடி) நிறைந்திருப்பதால் சுத்திகரிக்கப்படாத பாமாயில் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் கச்சா பாமாயிலை சுத்திகரிக்கும் போது இந்த கரோட்டின்கள் இழக்கப்படுகின்றன.

மீதமான சாதத்தை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடலாமா? ஆனா இதை மறக்காதீங்க!

Latest Videos


Palm Oil Health Benefits

ஆனால் அதே நேரம், பாமாயிலில் வைட்டமின் ஈ டோகோட்ரியெனால்கள் ஏராளமாக உள்ளன, அவை கொலஸ்ட்ராலைக் குறைக்கும் ஆற்றல் வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆகும். இது மிகவும் பல்துறை, சிக்கனமான மற்றும் நிலையான எண்ணெய், எனவே பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளுக்கு உணவுத் துறையால் தேர்ந்தெடுக்கப்பட்டது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாமாயிலில் 45% கொழுப்பு அமிலங்கள் செறிவூட்டப்பட்ட வகையிலும், 40% மோனோசாச்சுரேட்டட் வகையிலும், 10% பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமில வகையிலும். ஆரோக்கியமானது என்று கருதப்படும் மோனோசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் (MUFA) பாமாயிலில் ஏராளமாக இருப்பதால் இதயத்திற்கு ஏற்றதாக இருக்கும்.

பொதுவாக எண்ணெய்கள் உடல் பருமன் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால் பாமாயிலில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும் அம்சங்கள் இல்லை. 

பாமாயிலில் அதிக மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளடக்கம் (40%) உள்ளது, இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மற்ற எண்ணெய்களைப் போலவே பாமாயிலையும் மிதமாக உட்கொள்ளும்போது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காது.

Is Palm Oil Harmful

பாமாயில் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பிரபல குழந்தை நல மருத்துவரும், உணவு ஆலோசகருமான டாக்டர். அருண்குமார் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசிய போது “ உலகளவில் மொத்த எண்ணெய் உற்பத்தியில் 40% பாமாயில் பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய்யில் 92% நிறை கொழுப்பு உள்ளது. பாமாயிலில் 40 சதவீதம் நிறை கொழுப்பு உள்ளது. கடலை எண்ணெய்யில் நிறை கொழுப்பு 20% உள்ளது. 

பாமாயில், கடலை எண்ணெய் இரண்டிலுமே மோனோசாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் என்று அழைக்கப்படும் கொழுப்பு 40% உள்ளது. இதுதான் ஆரோக்கியமான கொழுப்பு என்று கருதப்படுகிறது. ஆனால் பாமாயிலில் நிறை கொழுப்பு அதிகம் உள்ளதால் அது ஆரோக்கியமற்றது என்று கருதப்படுகிறது. ஆனால் பாமாயிலில் நிறை கொழுப்பு மற்றும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு இரண்டுமே சமமான அளவில் இருப்பதால் இது ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது என்று எந்த ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை.

தினமும் எவ்வளவு நெய் சாப்பிடனும்? தினசரி உணவில் சேர்த்தால் இவ்வளவு நன்மைகளா?

Is Palm Oil Harmful

குறிப்பாக இது கெட்டக் கொழுப்பை அதிகரிப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ரேஷன் கடைகளில் கிடைக்கும் பாமாயில் சாப்பிடுவதால் கொழுப்பு அதிகரிக்காது, இதய நோய் ஏற்படும் ஆபத்தும் இல்லை.

அரசு ஏதாவது மலிவான விலையில் கொடுத்தாலே அது தரமற்றதாக இருக்கும் என்ற பொதுவான எண்ணத்தின் காரணமாகவே பாமாயில் ஆரோக்கியமற்றதாக கருதப்படுகிறது. இதனால் உடல் நலனுக்கு எந்த தீங்கும் ஏற்படாது. எனினும் மிதமான அளவில் எடுத்து கொள்வது அவசியம். பொதுவாக மற்ற எண்ணெய்யை சுத்தரிக்கும் போதும் ஏற்படும் கெடுதல்களும் பாமாமாயிலும் இருக்கும். ஆனால் பாமாயில் என்றாலே பயப்பட வேண்டிய அவசியமில்லை ” என்று தெரிவித்தார். 

click me!