Published : Oct 18, 2024, 08:49 AM ISTUpdated : Oct 18, 2024, 09:42 AM IST
Unknown Facts of Unreserved Coaches : ரயிலில் பொதுவாகவே முன்பதிவில்லா பெட்டிகள் முதலிலும் கடைசியிலும் இடம்பெற்று இருக்கும், அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் பற்றி பார்க்கலாம்.
ரயில் பயணம் என்பது எப்போதுமே தனிச்சிறப்பு தான். ரயிலில் ஸ்லீப்பர் அல்லது ஏசி கோச்சில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் முன்பதிவில்லா பெட்டியில் தான் பயணிக்க முடியும். அந்த பெட்டியில் பயணிக்க டிக்கெட் விலையும் கம்மி அதுமட்டுமின்றி அதில் இடம்பிடிக்க கடும் போட்டி இருக்கும். பண்டிகை நாட்களில் முன்பதிவில்லா பெட்டிகளில் நின்று செல்ல கூட இடம் இருக்காது. அந்த அளவுக்கு கூட்டம் எக்குத்தப்பாக இருக்கும். இப்படி அதிக கூட்டம் வந்தாலும் முன்பதிவில்லா பெட்டிகளை ரயிலில் அதிகரிக்க மாட்டார்கள்.
25
Indian Railways
அதுமட்டுமின்றி ரயிலில் மொத்தமே இரண்டு முன்பதிவில்லா பெட்டிகள் தான் இருக்கும். அதில் ஒரு பெட்டி எஞ்சினுக்கு அடுத்தபடியாகவும், மற்றொரு பெட்டி ரயிலின் கடைசி பெட்டியாகவும் இடம்பெற்று இருக்கும். இப்படி முன்பதிவில்லா பெட்டி முதலும் கடைசியுமா இருப்பது ஏன் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா.
இதுபற்றி சமூக வலைதளங்களில் விவாதம் நடந்தபோதுகூட பெரும்பாலானோர் சொன்ன பதில் என்ன தெரியுமா, ஏதேனும் விபத்து நடந்தால் முதலில் இருக்கும் பெட்டி தான் அதிகம் டேமேஜ் ஆகும், அதில் அதிகம் பயணிப்பது ஏழை மக்கள் தான். அவர்கள் உயிர்மேல் ரயில்வே நிர்வாகத்துக்கு எந்த அக்கறையும் இல்லாததால் தான் முன்பதிவில்லா பெட்டிகளை முதலும் கடைசியும் வைத்திருக்கிறார்கள் என நிறைய பேர் கூறி இருந்தார்கள்.
45
Train Facts
ஆனால் இதற்கு ரயில்வே தந்த விளக்கமே வேற ரகம் என்றே சொல்லலாம். முன்பதிவில்லா பெட்டிகளில் நிறைய பேர் பயணிப்பார்கள். அதனால் மற்ற பெட்டிகளோடு ஒப்பிடுகையில் அந்த முன்பதிவில்லா பெட்டிகள் மட்டும் அதிக வெயிட் உள்ளதாக இருக்கும். ரயிலின் முதல் பெட்டியும், கடைசி பெட்டியும் அதிக வெயிட்டோடு இருந்தால் எடைப் பகிர்வு சம்மாக இருக்கும்.
55
Unknown Facts of Unreserved Coaches
ஒருவேளை நடுவில் முன்பதிவில்லா பெட்டிகளை வைத்து அங்கே எடை அதிகமாகிவிட்டால் ரயில் தடம் புரள்வதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருக்குமாம். இதன் காரணமாக தான் ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகளை முதலும் கடைசியுமாக வைத்துவிட்டு, ஏசி, ஸ்லீப்பர் கோச்சுகளை இடையே வைத்திருக்கிறார்கள்.