பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு அறிவித்த முதல்வர்: ரேஷன் கடைகளில் இலவசமாக பொருள் வழங்க உத்தரவு

First Published | Oct 17, 2024, 11:44 AM IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவசமாக அரிசி, சர்க்கரை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Ration Shops

தமிழகம் உட்பட நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகின்ற 31ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை மக்கள் கொண்டாடும் விதமாக மத்திய, மாநில அரசுகள் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ், தீபாவளி பரிசு பொருட்களை அறிவித்துள்ளன. மேலும் மத்திய அரசு ஊழயிர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Ration Shop

இந்த வரிசையில் பல முன்னணி கார், பைக் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளின் மீது பல்வேறு சலுகைகளை அறிவித்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்கள் அல்லாத பொதுமக்களும் தீபாவளி பண்டிகையின் போது அரசால் பயன் பெறும் வகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகள் மூலமாக இலவச உணவு பொருட்கள் வழங்கப்படும் என்று அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Ration Shop

பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது ரேசன் கடைகளில் பச்சரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பாக வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பொதுமக்களுக்கு இலவச உணவுப் பொருள் வழங்கப்பட உள்ளது.

Ration Shop

இது தொடர்பாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரை, போன்ற பொருட்களை மானிய விலையில் ரேசன் கடைகள் மூலமாக விற்பனை செய்து வருகிறது.

Rangaswamy

அந்த வகையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 21ம் தேதி முதல் தீபாவளி பரிசாக மக்களுக்கு 2 கிலோ சர்க்கரை மற்றும் 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் உயர்த்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை வருகின்ற நவம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos

click me!