5 ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளுடன் முதல் தனியார் ரயில் நிலையம்!

First Published | Oct 17, 2024, 10:06 AM IST

இந்தியாவின் முதல் தனியார் ரயில் நிலையம் எது என்று தெரியுமா? சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வசதிகளுடன் இருக்கும் இந்தத் தனியார் ரயில் நிலையம் பற்றி இத்தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

Private railway station

இந்தியாவின் ஒவ்வொரு துறையும் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது. ரயில்வே துறையிலும் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக முன்னேறும் காலம் வெகு தொலைவில் இல்லை. அதற்கு முன்மாதிரியாக தனியார் ரயில் நிலையம் உலகத்தரம் வாய்ந்த வசதிகளுடன் இயங்கி வருகிறது.

Bhopal Private Railway Station

இந்த ரயில் நிலையத்தின் பெயர் ராணி கம்லபதி ரயில் நிலையம். மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலில் இருக்கும் ஹபீப்கஞ்சில் இந்த ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் முன்பு ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் என்று அழைக்கப்பட்டது. இது 13 நவம்பர் 2021 அன்று ராணி கம்லாபதி ரயில் நிலையமாக மாற்றப்பட்டது. இந்த ரயில் நிலையம் உயர் தொழில்நுட்ப வசதிகளுடன் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

Latest Videos


Habibganj railway station

ஐஆர்டிசியின் கூற்றுப்படி, இந்த ரயில் நிலையம் சர்வதேச அளவில் தனியார் உதவியுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச விமான நிலையத்தைப் போல ஆடம்பரமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையம் தற்போது நவீன முனையமாகவும் மாறியுள்ளது.

First private railway station

ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, உலகத்தரம் வாய்ந்த பல வசதிகளும் இங்கு உள்ளன. ஷாப்பிங் மால், ஹோட்டல், உணவகம், கார் பார்க்கிங் போன்ற வசதிகள் ரயில் நிலையத்திற்குள் உள்ளன. பயணிகள் இங்கு வசதியாக நேரத்தை செலவிடலாம். பயணத்தை இனிமையான அனுபவமாக மாற்றும்.

Indian railways

இந்த ரயில் நிலையத்தில் மின்சார வசதிக்காக சோலார் பேனல்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சக்திதான் ரயில் நிலையத்தின் மின்தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அவசரநிலை ஏற்பட்டால், 4 நிமிடங்களில் பயணிகள் வெளியேறும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த அவசர காலத்திலும் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது.

Habibganj railway station facilities

கோண்டு சமூகத்தைச் சேர்ந்தவர் ராணி கமலாபதி. அவர் கின்னோர்கர் மன்னர் நிஜாம் ஷாவை மணந்தார். மத்தியப் பிரதேச வரலாற்றில் அவர் மிகுந்த மரியாதையுடன் நினைவுகூரப்படுகிறார். ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணிகளுக்குப்பின், 2021 நவம்பரில் ​​பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். அப்போது ஹபீப்கஞ்ச் ரயில் நிலையம் ராணி கம்லாபதி ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Private railway station in India

இந்திய ரயில் நிலைய மேம்பாட்டுக் கழகம் தற்போது 8 ரயில் நிலையங்களை புனரமைத்து வருகிறது. போபாலின் ஹபீப்கஞ்ச் தவிர, சண்டிகர், புனேவின் சிவாஜிநகர், டெல்லியின் பிஜ்வாசன், ஆனந்த் விஹார், குஜராத்தின் சூரத், பஞ்சாபின் எஸ்ஏஎஸ் நகர் (மொகாலி) மற்றும் குஜராத்தின் காந்திநகர் ரயில் நிலையங்கள் இதில் அடங்கும். இந்த நிலையங்களின் வளர்ச்சிக்குப் பிறகு, இங்கும் சொகுசு வசதிகள் கிடைக்கத் தொடங்கும்.

click me!