Car Accident: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி! நடந்தது என்ன?

First Published | Oct 17, 2024, 12:00 AM IST

Car Accident: கார் விபத்தில் 4 சிறார்கள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். உறவினர் திருமண விழாவிற்கு சென்று திரும்பும் போது கார் மரத்தில் மோதி ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் தவிர மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் ஷிவம்பேட்டை அருகே தல்லாபள்ளி தாண்டா பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உறவினர் இல்லத் திருமண விழாவுக்கு சென்றுவிட்டு மீண்டும் காரில் ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். 

கார் ஷிவம்பேட்டை அருகே உசிரிக்கபள்ளியில் வந்துக்கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி கார் மரத்தில் மோதியது மட்டுமல்லாமல் ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 சிறார்கள் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், கார் ஓட்டுநர் மட்டும் உயிர் தப்பினார்.

Tap to resize

இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் கார் விபத்தில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் உயிரிழந்தவர்கள்தனவத சிவராம் (55), அவரது மனைவி துர்கம்மா (45), மாலோத் அனிதா, அவரது மகள்கள் பிந்து (14), ஸ்ரவாணி (12), குகுலோத் சாந்தி (45) மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்தது. உயிரிழந்த குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். 

Latest Videos

click me!