ஒரே ஸ்டேஷன்ல 23 பிளாட்பார்மா! அதிக Platform கொண்ட டாப் 10 ரயில் நிலையங்கள்!!

First Published Oct 17, 2024, 1:41 PM IST

Top 10 Biggest Railway Stations : நடைமேடை அதிகம் உள்ள இந்தியாவின் டாப் 10 ரயில் நிலையங்கள் என்னென்ன என்பது பற்றியும் அதில் உள்ள நடைமேடை எண்ணிக்கையையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Top 10 Biggest Railway Stations in India with most platforms

இந்தியாவின் பிரதான போக்குவரத்துகளில் ரயில்வேவும் ஒன்று. ஒரு நாளைக்கு லட்சக்கணக்கான மக்கள் உபயோகப்படுத்தும் நெட்வொர்க் ஆக இந்த ரயில்வே இருந்து வருகிறது. இவ்வளவு மக்கள் பயன்படுத்த முக்கிய காரணம் இதன் டிக்கெட் விலை மிகவும் குறைவு அதுமட்டுமின்றி பயண நேரமும் கம்மி என்பதனால் ரயில் பயணத்தை பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். ரயில்கள் நின்று செல்வதற்காக முக்கிய நகரங்களில் ரயில் நிலையங்கள் இருக்கும். அந்த ரயில் நிலையங்களில் Platform-களில் தான் ரயில் நின்று செல்லும். அப்படி இந்தியாவில் அதிக Platform உடன் கூடிய டாப் 10 ரயில் நிலையங்கள் பற்றி பார்க்கலாம்.

Patna Railway Station

10. பாட்னா ஜங்ஷன் ரயில் நிலையம்

பீகாரில் உள்ள பாட்னா ஜங்ஷன் ரயில் நிலையம் தான் இந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தமாக 10 நடைமேடைகள் உள்ளன.

Latest Videos


Allahabad Railway Station

9. அலகாபாத் பிரயாக்ராஜ் ரயில் நிலையம்

உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள அலகாபாத் ஜங்ஷன் ரயில் நிலையம் டாப் 10 ரயில் நிலையங்கள் பட்டியலில் 9ம் இடம் பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 10 நடைமேடைகள் இருக்கின்றன.

kanpur Railway Station

8. கான்பூர் சென்ட்ரல் ரயில் நிலையம்

அலகாபாத்தை தொடர்ந்து உத்தர பிரதேசத்தில் கான்பூர் செண்ட்ரல் ரயில் நிலையம் தான் 8-ம் இடம் பிடித்திருக்கிறது. இந்த ரயில் நிலையத்திலும் மொத்தம் 10 நடைமேடைகள் உள்ளன.

Gorakhpur Railway Station

7. கோரக்பூர் சென்ட்ரல் ரயில் நிலையம்

7வது இடத்திலும் உத்தர பிரதேசத்தில் உள்ள ரயில் நிலையம் தான் உள்ளது. அங்குள்ள கோரக்பூர் ரயில் நிலையம் தான் 7ம் இடம்பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 12 நடைமேடைகள் உள்ளன.

Ahmedabad Railway Station

6. அகமதாபாத் ரயில் நிலையம்

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் ஜங்ஷன் ரயில் நிலையம் தான் இந்த பட்டியலில் 6-வது இடத்தை பிடித்திருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 12 நடைமேடைகள் இருக்கின்றன.

இதையும் படியுங்கள்... தினமும் 600 ரயில்கள்! இந்தியாவின் மிகவும் பிஸியான ரயில் நிலையம் இதுதான்!

New Delhi Railway Station

5. புது டெல்லி ரயில் நிலையம்

இந்தியாவின் தலைநகராக உள்ள புது டெல்லியில் உள்ள ரயில் நிலையம் தான் இந்த பட்டியலில் 5ம் இடம் பிடித்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 16 நடைமேடை உள்ளது.

Chennai Central Railway Station

4. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்

இந்த பட்டியலில் தமிழ்நாடில் இருந்து இடம்பெற்றுள்ள ஒரே ஒரு ரயில் நிலையம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தான். இங்கு மொத்தம் 17 நடைமேடைகள் இருக்கின்றன.

Mumbai Railway Station

3. மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்

அதிக நடைமேடைகளை கொண்ட ரயில் நிலையங்கள் பட்டியலில் மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இதில் மொத்தம் 18 நடைமேடைகள் உள்ளன.

Sealdah Railway Station

2. கொல்கத்தா ஷீல்டா ரயில் நிலையம்

கொல்கத்தாவில் உள்ள ஷீல்டா ரயில் நிலையம் தான் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 21 நடைமேடைகள் உள்ளன.

Howrah Railway Station

1. கொல்கத்தா ஹவுரா ரயில் நிலையம்

இந்தியாவிலேயே அதிக நடைமேடைகளை கொண்ட ரயில்நிலையம் என்றால் அது கொல்கத்தாவில் உள்ள ஹவுரா ரயில் நிலையம் தான். இங்கு மொத்தம் 23 நடைமேடைகள் உள்ளன. இங்கு ஒரு நாளைக்கு 600 ரயில்கள் வந்து செல்கிறதாம். இந்தியாவின் மிக பிசியான ரயில் நிலையங்களில் இதுவும் ஒன்று.

இதையும் படியுங்கள்... 5 ஸ்டார் ஹோட்டல் போன்ற வசதிகளுடன் முதல் தனியார் ரயில் நிலையம்!

click me!