முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!

Oct 14, 2024, 7:24 PM IST

தமிழகத்தின் தலைநகராக இருந்தாலும் ஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் சென்னையில் வெள்ளம் சூழ்வது என்பது இயல்பான ஒரு விஷயமாகவே மாறிவிட்டது. இந்நிலையில் இந்த வருடம் பொதுவாக அக்டோபர் மாத இறுதியில் வரும் வடகிழக்கு பருவமழை, நாளை அக்டோபர் மாதம் 15ம் தேதி முதல் துவங்குவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்த சூழலில் கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருந்து வருகிறது. 

இது குறித்த அறிக்கையை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் "நாளை 15ம் தேதி சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும், வீட்டில் இருந்தே பணி செய்யும் வகையில் திறன் கொண்ட அலுவலகங்கள் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நடைபாதை வியாபாரிகள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களை பயன்படுத்துபவர்கள் உள்ளிட்ட பலரும் கவனத்துடன் செயல்படுமாறும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தியுள்ளார்.