vuukle one pixel image

Bengalauru Heavy Rain: அட சென்னையை விடுங்க கனமழையால் பெங்களூரு நிலைமையை கொஞ்சம் பாருங்க!

vinoth kumar  | Published: Oct 16, 2024, 5:31 PM IST

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில் கர்நாடகா மாநிலம் பெங்களூருவையும் கனமழை விட்டு வைக்காமல் வெளுத்து வாங்கியுள்ளது. இதனால், பெங்களூரு நகரமே வெள்ளக்காடாக காட்சி அளித்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியதை மட்டுமல்லாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து பெங்களூருவிற்கு வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. கனமழை காரணமாக பல்வேறு நிறுவன ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து பணி புரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.