UPS-க்கு தகுதியானவர் யார்?
ஜனவரி 25, 2025 அன்று அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக UPS-ஐ அறிவித்தது, இது தற்போது NPS-ன் கீழ் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்குப் பொருந்தும் என்று கூறியது. UPS-ஐத் தேர்ந்தெடுக்கும் ஊழியர்கள் கூடுதல் நிதிச் சலுகைகள் அல்லது கொள்கை மாற்றங்களுக்குத் தகுதி பெற மாட்டார்கள்.
யுபிஎஸ் திட்டத்தில் அதிகரித்த அரசின் பங்களிப்பு:
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஆகஸ்ட் 24, 2024 அன்று இந்தத் திட்டத்தை அறிவிக்கும் போது, அரசு பங்களிப்புகள் தொடர்பான முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தற்போதைய NPS-ன் கீழ், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதத்தையும், அரசாங்கம் 14 சதவீதத்தையும் பங்களிக்கின்றனர். இருப்பினும், புதிய UPS திட்டத்தின் கீழ், அரசாங்கத்தின் பங்களிப்பு ஏப்ரல் 1, 2025 முதல் ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 18.5 சதவீதமாக அதிகரிக்கும். அரசாங்க நிதியில் ஏற்படும் இந்த அதிகரிப்பு முதல் ஆண்டில் மத்திய கருவூலத்திற்கு ரூ.6,250 கோடி கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.