
தமிழக அரசின் கல்வி திட்டங்கள்
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களின் பசியை போக்கும் வகையில் காலை மற்றும் மதிய உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் எளிய மாணவர்கள் பயன் அடைந்து வருகின்றனர். மேலும் இலவச பேருந்து பயண அட்டை, அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு உயர்கல்வியில் படிக்கும் போது மாதம் ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி வருகிறது.
அரசு பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவதை போன்று விளையாட்டிலும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. குறிப்பாக மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது தற்போது 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிக்கான தேதியை அறிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக் கல்வித்துறை உடற்கல்வி -2024-2025 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி மாணவ. மாணவியர்களுக்கு மாநில அளவில் குடியரசு தின தடகளப் போட்டிகள் (RDS) பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் (BDG) - குடியரசு தின குழு விளையாட்டுப் போட்டிகள்(RDG) மற்றும் பாரதியார் தின (BD) குடியரசு தின ( RD ) புதிய விளையாட்டுப் (NEW GAMES) அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே போட்டிகளுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து, தங்குமிடம். உணவு வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்றவை பாதுகாப்பான முறையில் உள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். விளையாட்டு மைதானங்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பயன்படுத்தும் தரத்தில் அமைந்திடும் வகையில் தகுந்த மைதானங்களை தெரிவு செய்தல் மற்றும் அமைத்திட வேண்டும்.
விளையாட்டு போட்டி அட்டவணை
தொழில்நுட்ப குழு (Technical Committee) அமைத்து மைதானத்தின் தன்மை, உறுதி செய்ய வேண்டும். தகுதிவாய்ந்த அங்கீகரிக்கப்பட்ட நடுவர்கள் குழு அமைக்கப்பட்டு. விதிமுறைகளை முறையாக பின்பற்றி எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வண்ணம் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் போட்டிகளை நடத்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளை சிறப்பாக நடத்திடுவதற்கு உரிய குழுக்களையும் அமைத்து மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் உள்ளிட்ட அலுவலர்களுக்கும், உரிய பொறுப்புகளை வழங்கி உரிய ஆணைகளை வழங்கிடவும் தெரிவிக்கப்படுகின்றது.
விளையாட்டு போட்டிகளுக்கான தேதி
விளையாட்டி போட்டி அட்டவணையில் சதுரங்க போட்டிகளானது 11 வயது மாணவர்கள் முதல் 19 வயது மாணவ மாணவிகள் கலந்து கொள்ள முடியும். இந்த போட்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின தடகள போட்டிகளை போட்டியில் 14 வயது முதல் 19 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ள முடியும். இந்த போட்டியானது ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ளது. நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதியார் தின குழு விளையாட்டுப் போட்டிகள் பொருத்தவரை 19 வயதுக்குட்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்க முடியும். இந்த போட்டியானது திருச்சியில் டிசம்பர் மாதம் 5 தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கான பட்டியல்
குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகளை பொருத்தவரை 17 வயதுக்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ள முடியும். எனவும் இந்த போட்டியானது மதுரையில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை நடைபெறுமான தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜூடோ, கடற்கரை பந்து போட்டி, சாலையோர மிதிவண்டி போட்டி, நீச்சல் போட்டி, ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக் போட்டிக்கான தேதியும் போட்டி நடைபெறும் மாவட்டத்தின் பெயரும் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக வால் சண்டை போட்டி, கேரம் போட்டி, குத்து சண்டை, வளையப்பந்து, சிலம்பம், டேக்வாண்டோ மற்றும் குடியரசு தின போட்டிகள் நடைபெறும் மாவட்டம் மற்றும் போட்டிகள் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.