ஆரம்பமே அமர்களமாக வட கிழக்கு பருவமழை
தமிழகத்தில் மட்டுமல்ல நாடு முழுவதும் இந்தாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. பல இடங்களில் வரலாற்றில் முதல் முறையாக அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. எனவே அதற்கு ஏற்றார் போல் மழையும் இந்தாண்டு கொட்டித்தீர்க்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்து வந்தனர். இதனை மெய்பிக்கும் வகையில் பல இடங்களில் மழை கொட்டோ கொட்டு என கொட்டியது. பல நகரங்கள் தண்ணீரில் மூழ்கியது.
தமிழகத்தையும் மழை விட்டு வைக்கவில்லை. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவை, சென்னை, திருப்பூர் என பல மாவட்டங்களில் மழை பெய்தது. வடகிழக்கு பருவ மழை துவக்கமே அதிர்ச்சியை கொடுத்தது. வரும் நாட்களில் மழை எப்படி இருக்குமோ என மக்கள் அச்சமை அடைந்துள்ளனர்.
புதிய புயல் சின்னம் பாதிப்பு இல்லை
இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த மழை தற்போது தான் ஓய்துள்ளது. அதற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 20ஆம் தேதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. குறிப்பாக வடக்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு புதிய மேல் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அதன் தாக்கத்தால், மத்திய வங்கக்கடலில் அக்டோபர் 22ம் தேதியன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் சென்னையில் மீண்டும் மழை பெய்யும் என தகவல் வெளியானது. இதனால் மழையை எதிர்கொள்ள மக்கள் தயாராகி இருந்தனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியிலும் வருகிற 22ஆம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
நவம்பர் மாதம் மழை
இந்த நிலையில் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில், அடுத்து உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தம் - பெரும்பாலும் அது பலவீனமாகவே இருக்கும் இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லையென தெரிவித்துள்ளார்.
மேலும் அடுத்த வாரம் வடக்கு அந்தமான் அருகே இந்திய-சீனாவில் இருந்து வரும் அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பற்றி கவலைப்பட வேண்டாம், அது அந்தமான் கடலுக்குள் நுழையும் போது அது நமது சென்னை அட்சரேகைக்கு மேலே இருக்கும் என தெரிவித்துள்ளார். குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறாத பட்சத்தில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தை நோக்கி தள்ளப்படும். பெரும்பாலும் அது தீவிரமடைந்து மேலே சென்று விடும் என தெரிவித்துள்ளார்
Chennai rain
நவம்பரில் கொட்டப்போகும் மழை
நவம்பர் தமிழகத்திற்கு நிறைய மழையைக் கொண்டுவரும். கிங்மேக்கர் MJO இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பைக் காட்டப் போகிறது - நவம்பர் மாதம் தமிழகத்திற்கு நிறைய மழையைத் தரும். ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன், எங்கு கனமழை பெய்யும் என்பதை நாம் அறிவோம் என வெதர் மேன் தெரிவித்துள்ளார்.