Chennai Rain
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தென்மேற்கு பருவமழை முடிவடைந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஆரம்பமே அதிரடியாக சென்னை மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது. குறிப்பாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பல இடங்களில் தண்ணீரில் மூழ்கியது. சாலையில் தண்ணீர் தேங்கியது. சுரங்கப்பாதைகள் மூடப்பட்டது.
இந்த மழையானது தொடர்ந்து பெய்தால் சென்னையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால் அடுத்த நாளே மழை முழுவதுமாக நின்று வெயில் அடிக்க தொடங்கியது. சென்னையில் பெய்ய வேண்டிய மழை காற்றின் மாறுபாடு காரணமாக ஆந்திராவிற்கு சென்றது. இதனால் திருப்பதி உள்ளிட்ட இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.
Leave for schools
தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை
இருந்த போதும் வானிலை மையத்தின் அலர்ட் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. தனியார் நிறுவன ஊழியர்களும் வீட்டில் இருந்தே பணி புரிய உத்தரவிடப்பட்டது. ஆனால் நேற்று முன்தினம் மற்றும் நேற்று மழைக்கு பதிலாக வெயில் வாட்டி வதைத்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை இன்று காலை நேரத்தில் பெய்து வருகிறது. இந்த மழை தொடருமா என பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். மேலும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பலாமா என விடுமுறை விடப்படுமா என காத்திருந்தனர்.
school holiday
பள்ளி, கல்லூரிகள் இயங்கும்
இந்தநிலையில் தான் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை மாவட்டத்தில் இன்று (18.10.2024) அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்கள்