நெருக்கும் தீபாவளி; தாறுமாறாக குறையும் விமான டிக்கெட் விலை - எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா?

First Published Oct 17, 2024, 9:51 PM IST

Flight Ticket Price Drop : பண்டிகைகளின் வருகை மற்றும் எரிபொருள் விலை குறைப்பு உள்ளிட்டவை காரணமாக இப்போது விமான சேவை நிறுவனங்கள் பெரிய அளவில் சலுகைகளை அளித்து வருகின்றன.

Flight Ticket Fare

இந்தியாவைப் பொறுத்தவரை, குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை அதிக அளவிலான விமான பயன்பாடு கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் உயர்ந்து வருகிறது. மதுரை, சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பல உள்ளூர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விமான சேவை பெரிய அளவில் தற்பொழுது இயங்க துவங்கி இருக்கிறது என்றால் அது மிகையல்ல. கடந்த 10 ஆண்டுகளில் விமான துறையின் வளர்ச்சி மிகப் பெரிய உச்சத்தை எட்டி இருக்கிறது என்றே கூறலாம். அந்த வகையில் தற்பொழுது எண்ணெய் விலையும் குறைந்துள்ளதால் தொடர்ச்சியாக விமான டிக்கெட் விலைகளும் பெரிய அளவில் குறைந்து வருகிறது.

புக் பண்ண ரயில் டிக்கெட்; கேன்சல் செய்யாமலே வேறு தேதிக்கு மாத்திக்கலாம் - எப்படி தெரியுமா?

Flight Travel

அந்த வகையில் பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவிற்கு செல்லும் விமானங்களில் கடந்த ஆண்டு இதே தீபாவளி நேரத்தில் சுமார் 8,500 வரை விற்கப்பட்ட அதே விமான டிக்கெட் தற்பொழுது சுமார் 35 சதவீதம் குறைந்து 5500க்கு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல மும்பை மற்றும் டெல்லிக்கு இடையிலான விமான சேவை, கடந்த ஆண்டு இதே நேரம் சுமார் 8,700 இருந்த நிலையில் தற்போது 35% குறைந்து சுமார் 5600க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல சென்னை கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் டெல்லி உள்ளிட்ட நகரங்களுக்கு இடையிலான விமான சேவைக்கான கட்டணமும் தற்பொழுது சுமார் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

மேலும் தற்பொழுது விமான டிக்கெட் புக்கிங்கிற்கு பல செயலிகள் வந்துள்ள நிலையில், அவர்களும் பெரிய அளவிலான சலுகைகளை தங்கள் செயலியின் மூலம் வழங்கி வருகின்றனர்.

Latest Videos


Offer in Flight Ticket

இந்த தீபாவளி சீசனை பொருத்தவரை இந்திய அளவில் விமான கட்டணமானது சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை பெரிய அளவில் குறைந்திருக்கிறது. பிரபல Ixigo நிறுவனம் நடத்திய ஒரு புதிய ஆய்வில், போன வருடத்தை ஒப்பிடும்பொழுது இந்த வருடம் அதிக அளவிலான பயணிகளை ஏற்றி சொல்லும் அளவிற்கு விமான நிறுவனங்களின் பயணிகள் அளவும் அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் இப்போது அதிக அளவிலான விமானங்கள் பெரிய அளவில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

flight tickets in offer

இப்படி இந்திய அளவிலான பயணிக்கும் விமானங்களுக்கு பெரிய அளவில் விமான டிக்கெட் விலை குறைந்து வரும் அதே நேரத்தில், சென்ற ஆண்டு ஒப்பிடும்பொழுது அகமதாபாத் மற்றும் டெல்லியில் இடையிலான வழித்தடத்திற்கு கடந்த ஆண்டு சுமார் 6500 என்று இருந்த விமான டிக்கெட் விலை தற்பொழுது 8000 ரூபாய் வரை உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல மும்பையில் இருந்து டேராடூன் போன்ற அரிதான வழித்தடங்களிலும் செல்லும் விமானங்களுக்கு கடந்த ஆண்டு சுமார் 11 ஆயிரம் ரூபாய் டிக்கெட் விலை இருந்த நிலையில் இந்த வருடம் 15,500 ரூபாய் வரை டிக்கெட் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

சார்ட் வந்த பின்னரும் நீங்க Confirm Ticket வாங்கலாம்! வாங்க எப்படினு பார்க்கலாம்!

click me!