தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆனால், பள்ளிக்கு மாணவர்கள் குறித்த நேரத்தில் வந்தாலும் ஒரு சில ஆசிரியர்கள் தாமதமாக பணிக்கு வருவதும் முன்கூட்டியே புறப்பட்டு செல்வதும் வாடிக்கையாக இருந்து வந்தது. இதுதொடர்பாக புகார்களும் வந்த வண்ணம் இருந்தன.