School Education Department: அக்டோபர் 25-ம் தேதி வரை தான் கெடு! தேர்வுத் துறை அதிரடி!
Directorate of Government Examinations: பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வுத்துறை இணைய தளத்தில் சென்று (www.dge.tn.gov.in) மாணவர்களின் தகவல்களை விரைந்து பதிவு செய்ய வேண்டும்.
school teacher
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களின் தகவல்களை எமிஸ் (Education Management Information System) எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பின் மூலம் ஆன்லைனில் பள்ளிக் கல்வித்துறை பராமரித்து வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் அடிப்படையான விவரங்கள், கல்வி உதவித்தொகை, பருவ மதிப்பெண்கள், அரசின் நலத்திட்ட உதவிகள், கலை திருவிழாக்களில் பங்கேற்பு, வெற்றியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுள்ளது. இதுதொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதையடுத்து மாணவர்களின் விவரங்களை எமிஸ் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: TASMAC Shop: குடிமகன்களுக்கு குஷியான செய்தி ! டாஸ்மாக் கடைகளில் சூப்பர் ஏற்பாடு!
இதற்கான கால அவகாசம் கடந்த 14ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில், சில பள்ளிகள் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் சிக்கல்களை சந்திப்பதாக தெரிவித்துள்ளன.
இதனை கருத்தில் கொண்டு 10, 11-ம் வகுப்பு மாணவர்களின் தரவுகளை எமிஸ் தளத்தில் பதிவு செய்வதற்கான அவகாசம் அக்டோபர் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: Government Employees DA Hike: எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!
இதுவே இறுதி வாய்ப்பாகும். எனவே, பள்ளி தலைமையாசிரியர்கள் தேர்வுத்துறை இணைய தளத்தில் சென்று (www.dge.tn.gov.in) மாணவர்களின் தகவல்களை விரைந்து பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.