
தீபாவளி திருநாள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது, ஆனால் இந்த சூழலில் சொந்த ஊருக்கு செல்ல ரயில் டிக்கெட் பெற முடியவில்லையா? நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தும் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டைப் பெற முடியவில்லை என்றால், ஏமாற்றமடைய வேண்டாம். பண்டிகையன்று வீட்டிற்கு செல்ல இன்னும் உங்களிடம் ஒரு நம்பிக்கை உள்ளது. உண்மையில், இந்திய இரயில்வே தனது பயணிகளுக்கு அத்தகைய வசதியை வழங்குகிறது. அதன் கீழ் நீங்களில் சார்ட் பிரிப்பர் செய்த பிறகு கூட டிக்கெட்டை நீங்கள் பெறலாம். ரயில் புறப்படும் முன் பயணத்திற்கான உறுதியான டிக்கெட்டைப் பெறுவதற்கான கடைசி விருப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் பலருக்கு இப்படி சேவை இருப்பதே தெரியாது.
Train Reservation: ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்! பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே துறை!
ரயில் புறப்படுவதற்கு சற்று முன் உறுதியான டிக்கெட்டுகளைப் பெற ரயில்வே தனது பயணிகளுக்கு வாய்ப்பளிக்கிறது. வேகண்ட் (Vacant) டிக்கெட் எனப்படும் முறையில், ரயில் புறப்படுவதற்கு சற்று முன் காலியாக உள்ள இருக்கைகளில் டிக்கெட் பதிவு செய்யலாம். அதாவது நீங்கள் பயணம் செய்ய விரும்பும் ரயில் புறப்படுவதற்கு சிறுது நேரத்துக்கு முன்பு நீங்கள் இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். சில நேரங்களில் ரயில் புறப்படுவதற்கு முன், சிலர் தங்களது டிக்கெட் ரத்து செய்யப்படுவதால் சில இருக்கைகள் காலியாக இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், ரயில் புறப்படுவதற்கு 3-4 மணி நேரத்திற்கு முன்பு கரெண்ட் டிக்கெட் (Current Ticket) திறக்கப்படும்.
IRCTC தளம் மற்றும் டிக்கெட் கவுண்டர் இரண்டிலிருந்தும் இந்த கரெண்ட் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இருப்பினும், ரயிலில் காலி இருக்கைகள் இருந்தால் மட்டுமே இந்த கரெண்ட் டிக்கெட்டுகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் சிறப்பு என்னவென்றால், கரெண்ட் டிக்கெட்டுகள் சாதாரண டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை விட 10 முதல் 20 ரூபாய் மலிவானது என்பதை மறக்கவேண்டாம். புறப்படும் ரயிலின் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு கூட கரெண்ட் டிக்கெட் முன்பதிவு வசதி உள்ளது. குறிப்பாக குறைந்த தேவை உள்ள வழித்தடங்களில் டிக்கெட் பெறுவது எளிது. இருப்பினும், அதிக தேவை உள்ள வழித்தடங்களில் கரெண்ட் டிக்கெட்டுகளைப் பெறுவது அவ்வளவு எளிதானது அல்ல.
நீங்கள் IRCTC இணையதளம் அல்லது மற்ற செயலியில் இருந்து இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்தால், வண்டிகள் சார்ட் தயாரிக்கப்பட்ட பிறகு, அந்த ரயிலில் கரெண்ட் இருக்கை இருப்பதைக் காணலாம். ரயில் புறப்படுவதற்கு நான்கு மணி நேரத்திற்கு முன்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் தான் கவுண்டர்களிலும் கரெண்ட் டிக்கெட் முன்பதிவு திறக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 5-10 நிமிடங்களுக்கு முன்பு வரை கரெண்ட் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம்.
IRCTCல் அல்லது குறிப்பிட்ட செயலியில் உள்நுழைந்த பிறகு, 'Train' பட்டனைக் கிளிக் செய்யவும். முன்பதிவு டிக்கெட்டைக் கிளிக் செய்து, நீங்கள் பயணிக்க விரும்பும் நிலையத்தைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும் நாளின் தேதியைத் தேர்ந்தெடுக்கவும். பிறகு Search Train பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்களுக்கு தேவையான ரயிலை தேர்வு செய்யவும். அந்த ரயிலுக்கு கரெண்ட் டிக்கெட் ஏதேனும் இருந்தால், CURR_AVBL அங்கு காட்டப்படும். அதைத் தேர்ந்தெடுத்து பயணிகளின் விவரங்கள் உட்பட அனைத்து தகவல்களையும் நிரப்பவும். நீங்கள் பணம் செலுத்தியவுடன் உங்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் பதிவு செய்யப்படும்.
ரெஸ்ட் கொடுத்த கனமழை: மாற்று பாதையில் அறிவிக்கப்பட்ட முக்கிய ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்