GOVERNMENT JOB
அரசு பணி - இளைஞர்களின் கனவு
ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் படிப்பு முடித்து வேலை தேடி வெளி உலகத்திற்கு வருகிறார்கள். அப்படி வரும் பெரும்பாலோனோரின் எண்ணம் கால் காசாக இருந்தாலும் கவர்மென்ட் காசாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் நீண்ட காலமாக இருக்கிறது. அந்த வகையில் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளம் கிடைத்தாலும் அரசு வேலையில் இணையவே லட்சக்கணக்கானோரின் கனவாக இருக்கும் .
அந்த அளவிற்கு வேலை நிரந்தரம், மாதம் ஒன்றாம் தேதி பிறந்தால் சம்பளம், அரசு விடுமுறை என சந்தோஷமாக வாழலாம் என்பது பலரின் கனவு. அந்த வகையில் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் இணைய பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளின் மூலம் அவ்வப்போது பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
DA HIKEGOVE
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
அந்த வகையில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு பணியாளர்களுக்கு வருடத்திற்கு இரண்டு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படும். அந்த வகையில் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தவில்லை. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு இனிப்பான செய்தி வழங்கும் வகையில் 3 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
7ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின் பேரில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போதைய அடிப்படைச் சம்பளம் மற்றும் ஒய்வூதியத்தின் 50 சதவீதத்தை விட 3 சதவீத உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வானது கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
government staff
அரசு ஊழியர்கள் சங்கம் கோரிக்கை
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்கள் ஒரு கோடிக்கும் மேலானவர்கள் பயன்பெறுவுள்ளனர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு 9,448.35 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கும் வகையில் அகவிலைப்படி ஆண்டு தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் அமிர்தகுமார் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழக முதலைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கோரிக்கை மனுவில், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை 50 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
stalin
தீபாவளிக்கு முன் குட் நியூஸ்
எனவே தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு அக விலைப்படியை 53 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். எனவும் இதனை விரைவாக அறிவிப்பதன் மூலம் அரசு ஊழியர்கள் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வாய்ப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 53 சதவிகிம் அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில்,
தமிழக அரசும் அகவிலைப்படி அறிவிப்பு தொடர்பாக ஓரிரு நாட்களில் அறிவிக்ககூடும் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மழை பாதிப்பு நிவாரண பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிலையில் நாளை அல்லது நாளை மறுதினம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிடக்கூடும் கூடும் என தலைமை செயலக வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளது.