இலவசமாக சிசிடிவி கேமரா.! ஒரு போன் கால் செய்தால் போதும்- வெளியான சூப்பர் அறிவிப்பு

First Published | Oct 17, 2024, 11:57 AM IST

தொழில்நுட்ப வளர்ச்சியால் குற்றங்களும் அதிகரித்து வரும் நிலையில், சிசிடிவி கேமராக்கள் அவற்றைத் தடுக்கவும் குற்றவாளிகளைக் கண்டறியவும் உதவுகின்றன. அந்த வகையில் எங்கள் நகரத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் தமிழகத்தில் 10,000 சிசிடிவி கேமராக்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. 

CCTV Mandatory

மூன்றாவது கண்- சிசிடிவி கேமரா

நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப பல்வேறு மாற்றங்களும் நாளுக்கு நாள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உள்ளங்கையில் உலகம் என்பதை போல் ஒரு இடத்தில் இருந்து கொண்டு உலகத்தில் எந்த மூலையில் ஒரு பொருள் இருந்தாலும், எளிதாக வாங்க முடியும். அந்த வகையில் எப்படி தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்திருக்கிறதோ அதற்கு இணையாக சைபர் கிரைம் குற்றங்களும் மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்கவும், குற்றங்களை தடுக்கவும் மூன்றாவது கண் என அழைக்கப்படும சிசிடிவி கேமராங்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்படுகிறது. 

cctv camera

குற்றங்களை தடுக்கும் சிசிடிவி

இதன் காரணமாக பெரும்பாலான குற்றங்கள் தடுக்கப்படுவதோடு குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க முடிகிறது. மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும் சிசிடிவி முக்கிய பங்கு வகித்து வருகிறது. பல இடங்களில் செயின் பறிப்பு, பெண்களுக்கு எதிரான சீண்டல்கள் போன்றவற்றில் இருந்து காக்கும் கருவியாக சிசிடிடி உள்ளது. சிசிடிவியின் பயன்பாடு அதிகரித்ததன் மூலம் குற்ற சம்பவங்களும் பெரிய அளவில் தடுக்கப்பட்டுள்ளது.

குற்றங்கள் நடைபெற்றாலும் குற்றவாளிகளை விரைவில் கைது செய்யவும், குற்றவாளிகள் எந்த பகுதியில் தப்பித்து செல்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்கவும் காவல்துறையினருக்கு பெரும் பயனாக உள்ளது.  அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை என தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தமிழக காவல்துறை சார்பாகவும், தனியார் அமைப்பு சார்பாகவும் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Tap to resize

cctv

ஓடவும் முடியாது,ஒளியவும் முடியாது

இதன் காரணமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் சிசிடிவி கேமராவிற்கு பயந்தே குற்ற செயல்கள் செய்ய முடியாமல் தடுக்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் அலுவலகம், சொந்த ஊரில் உள்ள தோட்டம், வீட்டு வாசல் உள்ளிட்ட இடங்களில் மர்ம நபர்களின் நடமாட்டங்களை எங்கிருந்தும் மொபைல் போன் மூலம் பார்க்க முடியும். அந்த அளவிற்கு சிசிடிவியின் பயன்பாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது. சாலைகளில் மட்டுமே இருந்த சிசிடிவி கேமராக்கள் தற்போது ஒவ்வொரு தெருக்களிலும் வந்துவிட்டது. தற்போது பல்வேறு இடங்களில் சிசிடிவிக்கள் பொருத்தப்பட்டு வரும் நிலையில் தனியார் நிறுவனம் இலவசமாக சிசிடிவி கேமராக்களை வழங்க முன்வந்துள்ளது.  

10 ஆயிரம் இலவச சிசிடிவி கேமராக்கள்

வெளிநாடுகளில் உள்ள பாதுகாப்பு கட்டமைப்பை நமது நாட்டிலும் செயல்படுத்தும் வகையில் செக்யூர் கேம் என்கிற தனியார் நிறுவனம் எங்கள் நகரத்தை பாதுகாப்போம் என்ற பெயரில் உலகளாவிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உலகத்தரமான 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்களை இலவசமாக பொருத்தப்படுகிறது. 

accident cctv

ஒரு போன் கால் செய்தால் சிசிடிவி கேமரா

இது மக்களின் பாதுகாப்பிற்காக செயல்படுத்தப்படுவதாக செக்யூர் கேம் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இலவச சிசிடிவி பெற விரும்புவோர் அதாவது, குடியிருப்புகள், பெண்கள் விடுதி, டே கேர், ப்ளே ஸ்கூல், நர்சரி பள்ளி, கல்வி நிறுவனம் முதியோர் தங்குமிடம், ஆதரவற்றோர் இல்லம், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள் +91 96054 35521 என்ற எண்ணை தொடர்புகொண்டால் அவர்களுக்கு நிபுணர்களின் ஆலோசனையுடன் முழு நேரமும் கண்காணிக்க வசதியாக இலவச சிசிடிவி கேமராவும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தின் இந்த திட்டத்தால் பாதுகாப்பான நகரை உருவாக்க ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

Latest Videos

click me!