சூப்பர் வாய்ப்பு.! ரூபாய் 10 லட்சம் வழங்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு

Published : Oct 17, 2024, 09:58 AM ISTUpdated : Oct 17, 2024, 10:10 AM IST

தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்கள், நிதி உதவி திட்டங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி வருகிறது. மகளிர் உரிமைத் தொகை, மாணவிகளுக்கான உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், திருமண உதவித்தொகை போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழறிஞர்களுக்கும், கலை நூலாசிரியர்களுக்கும் நிதி உதவி வழங்கப்படுகிறது.

PREV
14
சூப்பர் வாய்ப்பு.! ரூபாய் 10 லட்சம் வழங்கும் தமிழக அரசின் அசத்தல் திட்டம்.! உடனே விண்ணப்பிக்க அழைப்பு

தமிழக அரசின் திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக மக்கள் நலத்திட்டங்கள், நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். குறிப்பாக மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை தொகை, உயர்கல்வியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், முதியோர்களுக்கு ஓய்வூதியம், திருமண உதவி திட்டம், கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம், கைம்பெண்களுக்கு உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரம் முன்னேற்றத்திற்கு உதவியாக இருந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் சொந்த தொழில் தொடங்குவதற்காக மானியமாக நிதி உதவியும் தமிழக அரசு வழங்கி வருகிறது. 

24

தமிழக அரசின் உதவி தொகை திட்டம்

இது ஒருபக்கம் என்றால் தமிழறிஞர்களை கவுரவிக்கும் வகையிலும் பல திட்டங்களை செயல்படுத்துகிறது. குறிப்பாக 275 தமிழறிஞர்களுக்கு சிறப்பு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாட்டில் வாழும் 275 தமிழறிஞர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொருவருக்கும் சிறப்பு உதவித் தொகையாக ரூ.10,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளியில் தொடங்கி வைக்கப்பட்டு 275 பேருக்கு ஒருமுறை சிறப்பு உதவித்தொகை வழங்கிட ரூ.27,50,000/- வழங்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் ஆர்வர்கள் மொழியை வளர்ப்போர் பயன்படும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

34

மாதாந்திர உதவி தொகை திட்டம்

முதுமைக்காலத்திலும் பாதிக்கப்பட்ட தமிழறிஞர்களுக்கு உதவிடும் வகையில்  மாதந்தோறும் ரூ.3500  மற்றும் மருத்துவப்படி ரூ.500, என நான்காயிரம் ரூபாய் உதவித் தொகையாக வழங்கப்பெறுகிறது. இதுபோன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வரும் நிலையில் கலை நூல்களை எழுதும் நூலாசிரியர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் கலை சார்ந்த நூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வண்ணம், கருத்தாழமிக்க, தமிழில் அரிய கலை நூல்களை பதிப்பிக்க, நூல் ஒன்றுக்கு ரூ.2.00 இலட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ.10.00 இலட்சம் வழங்கிடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

44

10 லட்சம் ரூபாய் நிதி உதவி திட்டம்

இந்த திட்டத்தின் மூலம் நூலாசிரியர்கள் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பப் படிவத்தினை மன்றத்தில் இலவசமாக நேரிலோ அல்லது தபாலிலோ (சுயமுகவரியிட்ட உறையில் ரூ.10/-க்கான தபால் தலை ஒட்டி மன்றத்திற்கு அனுப்பி) பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை முகவரி வருகிற 25.10.2024-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

உறுப்பினர்-செயலாளர்

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம்,

31, பொன்னி, பி.எஸ். குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 600 028

தொலைபேசி: 044-2493 7471

Read more Photos on
click me!

Recommended Stories