MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Train Reservation: ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்! பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே துறை!

Train Reservation: ரயில் டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்! பயணிகளுக்கு ஷாக் கொடுத்த ரயில்வே துறை!

Train Reservation: 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது.  

2 Min read
Author : vinoth kumar
| Updated : Oct 17 2024, 03:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பொது போக்குவரத்து துறையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் துறையாக ரயில்வே துறை இருந்து வருகிறது. இதனை பயன்படுத்தி நாடு முழுவதும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை மற்றும் விஷேச நாட்கள், பாதுகாப்பான பயணம் உள்ளிட்ட காரணங்களால்  வழக்கத்தை விட கூடுதலாக ரயிலில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். 

26

இதனால் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி டிக்கெட் முன்பதிவு காலம் 60 நாட்களில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களாக உயர்த்தப்பட்டது. இதனையடுத்து 120 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்து கொள்ளும் வசதி பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் கால அவகாசத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: Government Employees DA Hike: எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! மத்திய அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்!

36
train

train

இதுதொடர்பாக ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ரயில் டிக்கெட்டை முன்கூட்டியே முன்பதிவு செய்வதற்கான காலம், 120 நாட்களில் இருந்து 60 நாளாக குறைப்பாக ரயில்வே துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நடைமுறை நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.  

46

பகல் நேரங்களில் இயக்கப்படும் தாஜ் எக்ஸ்பிரஸ், கோமதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்களுக்கான முன்பதிவில் எந்தவித மாற்றமும் இருக்காது என தெரிவித்துள்ளது. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு 365 நாட்கள் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: Tirupati Temple: புத்தாண்டுக்கு திருப்பதி போற ஐடியா இருக்கா! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

56

தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனர். இந்த டிக்கெட்டுகள் குறித்து கவலைப்பட வேண்டாம் எனவும் அக்டோபர் 31ம் தேதி வரை செய்யப்பட்ட ரயில் டிக்கெட் முன்பதிவில் எந்த மாற்றமும் இருக்காது அனைத்தும் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

66

இதை பொதுமக்கள் அனைவருக்கும் எடுத்துச்செல்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்களும், விளம்பரங்களும் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தொடர்வண்டி பயணச்சீட்டு
இந்திய இரயில்வே
டிக்கெட் முன்பதிவு

Latest Videos
Recommended Stories
Recommended image1
பழைய தங்கத்தை விற்றால் லாபமா? மாற்றினால் லாபமா? உங்கள் பணத்தை மிச்சப்படுத்தும் ரகசியம் இதோ!
Recommended image2
வாங்கும் போது இனிக்கும், கட்டும் போது கசக்கும்.. தனிநபர் கடன் vs கிரெடிட் கார்டு EMI.. எது பெஸ்ட்..?
Recommended image3
கர்ப்பிணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு.. ரூ.5000 அள்ளி கொடுக்கும் அரசு..! விண்ணப்பிப்பது எப்படி..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved