Vande Bharath
ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான பயணிகளின் உயிர் நாடியாக திகழ்ந்து வருகின்றது இந்திய ரயில்வே என்றால் அது நிச்சயம் மிகையல்ல. ஏற்கனவே தனது பயணிகளுக்கு பல வகையான வசதிகளை இந்திய ரயில்வே வழங்கி வரும் நிலையில், உங்களுடைய புக் செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்யாமலே மாற்று தேதிக்கு அந்த டிக்கெட்டை மாற்றிக்கொள்ள வழிவகை செய்து வருகின்றது இந்திய ரயில்வே. உங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, உற்சாகத்துடன் உங்கள் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளீர்கள். ஆனால், பயணத் தேதி நெருங்கும் போது, எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்படுகின்றன, இதனால் உங்கள் திட்டங்கள் மாறுகின்றது. இதுபோன்ற சூழ்நிலைகளில், உங்கள் டிக்கெட்டை ரத்து செய்வது சிரமமாக இருக்கும்.
சார்ட் வந்த பின்னரும் நீங்க Confirm Ticket வாங்கலாம்! வாங்க எப்படினு பார்க்கலாம்!
Train Ticket Cancelling
ஆனால் அப்படி செய்யாமலே, நீங்கள் உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற நாளில் அந்த புக் செய்த டிக்கெட்டை மாற்றிக்கொள்ளமுடியும். மக்களின் இதுபோன்ற சுமையை குறைக்க இந்திய ரயில்வே ஒரு தீர்வை கண்டுள்ளது. ரத்து செய்ய வேண்டிய அவசியமின்றி உங்கள் டிக்கெட்டின் பயண நேரத்தை மாற்றியமைக்க உங்களுக்கு இப்போது ஒரு வாய்ப்பு உள்ளது. நீங்க செல்லவேண்டிய ரயில் புறப்படுவதற்கு சுமார் 48 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு கவுண்டரில் உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்டை ஒப்படைத்தால் போதும். ஆம் ஆன்லைன் மூலம் நீங்கள் டிக்கெட் முன் பதிவு செய்திருந்தாலும், அந்த டிக்கெட் நாகலோடு நீங்கள் ரயில்நிலையத்தில் உள்ள கவுண்டருக்கு செல்ல வேண்டும்.
Train Ticket Rescheduling
பொதுவாக உங்களுடைய ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக வரை இந்த மாற்றத்தை உங்களால் செய்துகொள்ள முடியும். இதுவே அரசு ஊழியராக இருந்தால் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக கூட அவர்களால் தங்களுடைய பயண தேதியை மாற்றிக் கொள்ள முடியும் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் எப்படி இருந்தாலும் நீங்கள் ஆன்லைன் மூலம் டிக்கெட் புக் செய்திருந்தாலும், ரயில் நிலையத்தில் உள்ள டிக்கெட் கவுண்டர்களுக்கு நேரில் சென்று மட்டுமே இந்த மாற்றத்தை உங்களால் செய்து கொள்ள முடியும்.
ரெஸ்ட் கொடுத்த கனமழை: மாற்று பாதையில் அறிவிக்கப்பட்ட முக்கிய ரயில்கள் வழக்கம் போல் இயக்கம்