அடி தூள்.! ஒரே நாளில் 45 ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு.! தமிழக அரசின் சூப்பர் பிளான்

First Published | Oct 18, 2024, 7:11 AM IST

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 45,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் சிறப்பு முகாம்கள் அக்டோபர் 19, 2024 அன்று நடைபெற உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

job opportunities

தமிழக அரசின் வேலைவாய்ப்பு திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் அரசு பணிகளில் இணைய அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வாகும் இளைஞர்கள் அரசு பணியில் இணைக்கப்படுகிறார்கள். இதே போல சொந்த தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தி கடனுதவிக்கான வழிகாட்டவும் செய்கிறது. இந்தநிலையில் தனியார் துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கிறது.

இதனை சரியான வகையில் தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள சிறப்பு வேலைவாய்ப்பு முகாமையும் நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (19.10.2024) தமிழகத்தில் முக்கிய நகரங்களில் 45 ஆயிரம் பேருக்கு தனியார் துறையில் வேலை வழங்கும் வகையில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 
 

நாகப்பட்டினத்தில் வேலைவாய்ப்பு முகாம்

அடுத்ததாக நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாகப்பட்டினம் 19,10.2024 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணிவரை E.G.S பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது.

முகாமின் சிறப்பு அம்சங்கள் :

10,000-க்கும் மேற்பட்ட பணி வாய்ப்புகள்

100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள்

வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் QR Code - ஐ பயன்படுத்தி முன்னதாகவே பதிவு செய்து பயன்பெறலாம்.

கல்வி தகுதிகள்

ITI, Any Diploma, B.E., B.Tech, Nursing, Management and Driver,

தேவையான ஆவணங்கள்

சுயவிவரம் (பயோடேட்டா) கல்வி சான்றிதழ்கள் (நகல் Xerox மட்டும்)

வயது வரம்பு: 18-35

Tap to resize

கிருஷ்ணகிரியில் பிரபல நிறுவனங்களில் வேலை

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக 19,10,2024 சனிக்கிழமை அன்று கிருஷ்ணகிரி, இராயக்கோட்டை ரோடு அரசு மகளிர் கலைக்கல்லூரியில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்;-

8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I,T.I. டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு

வேலை தேடும் நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரை சேர்ந்த Ashok Leyland, Delta Electronics மற்றும் TVS Company போன்ற 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 5000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் தொடர்பான விவரங்களுக்கு 04343-291983 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

கரூரில் 10ஆயிரம் இடங்களுக்கு பணியாளர் தேர்வு

இதே போல மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் கரூர் மாவட்டத்தில் 19,10,2024 சனிக்கிழமை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாந்தோனிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெறும்.

சிறப்பு அம்சங்கள்

200க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள்

10,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளுக்கான விண்ணப்பம் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்படும்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

கல்வித்தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ டிப்ளமோ நர்சிங் பார்மஸி, பொறியியல்

வயது வரம்பு இல்லை

தொடர்புக்கு

வேலைதேடுவோர்: 9345261136

தனியார் துறைகள்: 9499055912 / 9360557145
 

20ஆயிரம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

மேலும் பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.10.2024 சனிக்கிழமை துறையூர் ரோடு காலை 8,00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.

முகாமின் சிறப்பு அம்சங்கள் :

20,000 பணி வாய்ப்புகள்

120+ நிறுவனங்கள்

சுயதொழில் தொடங்க ஆர்வம் உள்ளவர்களுக்கு மாவட்ட தொழில் மையம் தாட்கோ போன்ற நிறுவனங்களின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள் சுயதொழில் உருவாக்கும் திட்டத்திற்கான ஆலோசனைகள் வழங்கப்படும்

தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் நடைபெறும்

கல்வித் தகுதிக்கேற்ப தனியார் துறை வேலைவாய்ப்பு குறைந்தபட்ச மாத ஊதியம் ₹. 10000/- - 25000/-

கல்வி தகுதிகள்

ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ITI,

Any Diploma, Hotel Management, Nursing, Paramedical, Driver

தேவையான ஆவணங்கள்

சுய விவரம் (பயோடேட்டா) கல்வி சான்றிதழ்கள் (நகல் Xerox மட்டும்)

வயது வரம்பு: 18-35

மேலும் விபரங்களுக்கு:

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டல் மையம், பெரம்பலூர்.

Latest Videos

click me!