தமிழ்நாடு சுற்றுலாதுறையில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் அசத்தலான வேலை வாய்ப்பு
தமிழக சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள 26 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பது? தகுதிகள் என்ன? ஊதியம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
TTDC Job Offer
தமிழக சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள 26 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்கு எப்படி விண்ணப்பது? தகுதிகள் என்ன? ஊதியம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
தகுதி
உதவி பொதுமேலாளர் பதவிக்கு ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் முடித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். பொதுமேலாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.70 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
அசோசியேட் பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்து 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். அசோசியேட் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளமாக வழங்கப்படும்.
TTDC
டிகிரி முடித்து 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் சீனியர் அசோசியேட் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இப்பதவிக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
நிகழ்வு மேலாளர் பதவிக்கு டிகிரி முடித்து 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் நபருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
Job Vacancy
IT Monitoring பதவிக்கு பொறியியல் கணினி அறிவியல் அல்லது ஐடி அல்லது கணினி அறிவியல் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அசோசியேட் பதவிக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.
Project Formulation பதவிக்கு சுற்றுலா தொடர்பான பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். சீனியர் அசோசியேட் பதவிக்கு மாதம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படும்.
Job Offer
Architect பதவிக்கு கட்டிடக்கலையில் இளங்கலை பட்டம் பெற்று 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இப்பதவிக்கு ரூ.50 ஆயிரம் சம்பளம் பெற்றிருக்க வேண்டும்.
Interns பதவிக்கு B.Arch மற்றும் பொறியியல் (Civil) முடித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். பயிற்சியாளர் பதவிக்கு ரூ.20 ஆயிரம் மாத சம்பளம் வழங்கப்படும்.
சைட் இன்ஜினியரிங் பதவிக்கு சிவில் அல்லது எலக்ட்ரிக் பிரிவில் பொறியியல் படித்திருக்க வேண்டும். இப்பதவிக்கு விண்ணப்பிக்க 5 ஆண்டுகள் அனுபவம் தேவை. இப்பதவிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்.
வேகமாக வளரும் 8 வேலைவாய்ப்புகள்! இனி இந்த வேலைகளுக்கு தான் அதிக டிமாண்ட்!
Job Vacancy
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வருகின்ற 20ம் தேதி ஆகும். விண்ணப்பங்கள் முழுமையாக பெறப்பட்ட பின்னர் நேர்காணல் தொடர்பான அறிவிப்பு வெளியாகும். இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tamilnadutourism.tn.gov.in என்ற இளையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியும். இப்பதவிகளுக்கு ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதால் சுற்றுலாத்துறையில் முன் அனுபவம் உள்ள நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.