MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • மாணவிகளுக்கு மாதம் ரூ.42000 உதவித்தொகை: எப்போது கிடைக்கும்?

மாணவிகளுக்கு மாதம் ரூ.42000 உதவித்தொகை: எப்போது கிடைக்கும்?

ஆராய்ச்சி படிப்புகளை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு யுஜிசி சார்பில் வழங்கப்பட்ட சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு கடந்த 2 ஆண்டுகளாக அறிவிப்பு வெளியாகாததால் மாணவிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

1 Min read
Author : Velmurugan s
| Updated : Oct 16 2024, 02:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Scholarship Fund

Scholarship Fund

கல்லூரியில் இளங்கலை, முதுகலை படிப்புகளை மேற்கொள்ளும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆராய்ச்சி படிப்புகளைத் தொடரும் மாணவிகளுக்கு உதவி செய்யும் வகையில் கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலே கல்வி உதவித் தொகை திட்டத்தை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிமுகப்படுத்தியது.

25
Scholarship Fund

Scholarship Fund

இந்த திட்டத்தின் படி முழுநேர ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் பெண்களுக்கு 5 வருடங்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இத்திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் பெறப்படும். நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் முழு நேர ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

35
Scholarship Fund

Scholarship Fund

தகுதியானவர்கள்
மேலும் குடும்பத்தில் ஒரே பெண் பிள்ளையாக உள்ளவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற தகுதியானவர்களாகக் கருதப்பபடுவர்.

திட்டத்தில் தேர்வு செய்யப்படும் மாணவிகளுக்கு முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.31 ஆயிரம், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.35 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் 2023ம் ஆண்டு இத்திட்டத்திற்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டது. அதன்படி முதல் 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.37 ஆயிரமும், அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.42 ஆயிரமும் வழங்க நிர்ணயிக்கப்பட்டது.

45
Scholarship Fund

Scholarship Fund

இத்திட்டத்திற்காக முதல் முறையாக கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தமாக 1,144 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் அதில் 1,129 விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்தவையாக தேர்வு செய்யப்பட்டன. மேலும் இத்திட்டத்தில் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையும் இது தான். இதன் பின்னர் 2023 - 24, 2024 - 25 என இரு கல்வியாண்டுகளிலும் இத்திட்டத்தில் விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படவில்லை.
 

 

55
Scholarship Fund

Scholarship Fund

பெண்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட திட்டத்தைத்திற்காக தகுதியான பலரும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

About the Author

VS
Velmurugan s
இவர் இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். செய்தி எழுதுவதில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். தமிழ்நாடு, அரசியல், ஆட்டோமொபைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் செய்திகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளிக் கூடத்திலேயே இதையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்களா? NCERT-யின் புதிய பாடத்திட்டத்தால் வெடித்த விவாதம்!
Recommended image2
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஆசையா? CUET நுழைவுத்தேர்வுக்கு அப்ளை பண்ண பிப்ரவரி 26 தான் லாஸ்ட் டேட்!
Recommended image3
"படிக்கிறது ஒரு IIT-ல.. டிகிரி வாங்குறது வேறொரு IIT-ல!" - மத்திய அரசின் மாஸ் பிளான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved