MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Career
  • Tamilnadu Government: மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு.. எத்தனை காலி இடங்கள்? என்னென்ன தகுதிகள்? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

Tamilnadu Government: மருத்துவ துறையில் வேலைவாய்ப்பு.. எத்தனை காலி இடங்கள்? என்னென்ன தகுதிகள்? தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு!

SDAT Recruitment: கடந்த 5 ஆண்டுகளில் தகுதியான சர்வதேச, தேசிய, அல்லது மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சாதனை படைத்த வீரர்கள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) இணையதளம் மூலம் ஜூன் 24-க்குள் விண்ணப்பிக்கலாம்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 23 2026, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
 3 சதவிகித இட ஒதுக்கீடு
Image Credit : Asianet News

3 சதவிகித இட ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் விளையாட்டு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகள், திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் சார்பாக ஒலிம்பிக், பிற சர்வதேச அளவிலான போட்டிகளில், தேசிய, மாநில அளவில் பங்கேற்று பதக்கம் பெற்ற விளையாட்டு வீரர்களை ஊக்குவித்திடும் வகையில் அவர்களுக்கு அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கண் மருத்துவ உதவியாளர்கள் 3 பணியிடங்கள்
Image Credit : Asianet News

கண் மருத்துவ உதவியாளர்கள் 3 பணியிடங்கள்

விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் 3% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ துறையில் கண் மருத்துவ உதவியாளர்கள் 3 பணியிடங்களுக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. வேலை வாய்ப்பு பெறுவதற்கு கீழ்காணும் விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிக்கும் ஆண்டிற்கு முந்தைய கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட விளையாட்டு சாதனைகள் மட்டுமே தகுதியானவையாக கருதப்படும். குழு விளையாட்டுகளில், மாநில அளவில் குறைந்தது 50% போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Related image1
Petrol Diesel Price Hike: அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.
Related image2
Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
35
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
Image Credit : Asianet News

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

இதற்கு தகுதிகளாக கீழ்காணும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்றவர்களாகவோ அல்லது பங்கேற்றவர்களாகவோ இருத்தல் வேண்டும். அந்தவகையில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்ட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள்.

45
சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும்
Image Credit : Asianet News

சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும்

மேலும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் நடத்தப்படும் காமன்வேல்த் சாம்பியன்ஷிப் போட்டிகள், 4 ஆண்டுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுக்கு ஒருமுறை அல்லது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பின் கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகள், தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுப் போட்டிகள், பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள், சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் மற்றும் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள், தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளால் நடத்தப்படும் தேசிய சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஆகியவை, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மட்டும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகள்.

55
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம்
Image Credit : our own

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம்

மேலும் போட்டிகளின் அனைத்து நிலைகளிலும், சீனியர் அளவிலான போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும். மேற்கண்ட வழிகாட்டுதல்களின் அடிப்படையில், தமிழ்நாடு மருத்துவ துணைப் பணியாளர் சேவையில் கண் மருத்துவ உதவியாளர் பணிக்கான 3 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் வழியாக விண்ணப்பங்களை வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு இணையதளம் வழியாக 25.05.2026 காலை 10 மணி முதல் 24.06.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். விளையாட்டு வீரர்கள் தங்கள் விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளமான www.sdat.tn.gov.inஇல் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Govt Scheme: அரசு தரும் ரூ.4,000 உதவித்தொகை... முதலில் இந்த சான்றிதழை வாங்குங்கள்!
Recommended image2
Microgreens Training: மைக்ரோ கிரீன்ஸ் மூலம் மாதம் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம் ஈசியா.! பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?
Recommended image3
BSNL Recruitment 2026 : BSNL-ல் அரசு வேலை வாய்ப்பு.. இன்ஜினியரிங், IT படித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு
Related Stories
Recommended image1
Petrol Diesel Price Hike: அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு.
Recommended image2
Chennai Power Cut: மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved