MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Training: சொந்தமா தொழில் தொடங்கலாம் ஈசியா? அரசு வழங்கும் 4 நாட்கள் பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?

Training: சொந்தமா தொழில் தொடங்கலாம் ஈசியா? அரசு வழங்கும் 4 நாட்கள் பயிற்சி எங்க நடக்குது தெரியுமா?

மத்திய அரசின் MSME தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக "How to Start Your Own Business" என்ற 4 நாள்  பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது. 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : May 28 2026, 10:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இனி நீங்களும் பிஸ்னஸ் மேன்தான்
Image Credit : Asianet News

இனி நீங்களும் பிஸ்னஸ் மேன்தான்

இன்றைய காலத்தில் பலரும் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலை வழங்குபவர்களாக மாற வேண்டும் என்ற ஆசையில் சொந்த தொழில் தொடங்க விரும்புகின்றனர். ஆனால் “எப்படி தொடங்குவது?”, “எந்த பதிவு செய்ய வேண்டும்?”, “கடன் எப்படி பெறுவது?” போன்ற கேள்விகள் காரணமாக பலர் தங்களது கனவை தள்ளிப்போடுகின்றனர். இதற்காகவே மத்திய அரசின் MSME தொழில்நுட்ப மேம்பாட்டு மையம் (MSME Technology Development Centre) சிறப்பு 4 நாட்கள் பயிற்சி திட்டத்தை அறிவித்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
என்ன இந்த பயிற்சி?
Image Credit : Asianet News

என்ன இந்த பயிற்சி?

“How to Start Your Own Business” என்ற தலைப்பில் அரசு சான்றிதழுடன் கூடிய தொழில்முனைவோர் பயிற்சி நடைபெறுகிறது. இந்த பயிற்சி சென்னை கிண்டியில் உள்ள MSME Technology Development Centre மூலம் ஆன்லைனில் நடத்தப்படுகிறது. தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் புதிய ஸ்டார்ட்அப் முயற்சியாளர்களுக்கு இது பெரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Related image1
Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா
Related image2
Side Business Ideas: வெறும் ₹200 முதலீட்டில் 5 சூப்பர் பொருட்கள்! வீட்டில் இருந்தே செமயா சம்பாதிக்கலாம்!
34
எப்போது நடைபெறுகிறது?
Image Credit : Asianet News

எப்போது நடைபெறுகிறது?

இந்த 2 வார இறுதி (Weekend) ஆன்லைன் பயிற்சி வரும் ஜூன் 6, 7, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. தினமும் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை வகுப்புகள் நடைபெறும்.

என்னென்ன கற்றுக்கொடுக்கப்படும்?

இந்த பயிற்சியில் தொழில் தொடங்குவதற்கான அடிப்படை முதல் முழுமையான நடைமுறைகள் வரை விரிவாக கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

அதில் சில முக்கிய அம்சங்கள்

  • சொந்த தொழிலை எப்படி தொடங்குவது? 
  • தொழிலை திட்டமிடுவது எப்படி? 
  • தொழில்முனைவோராக மாற 10 முக்கிய படிகள் 
  • MSME திட்டங்கள் மற்றும் உத்யம் பதிவு 
  • TIIC கடன் பெறும் முறை 
  • நிறுவனம் பதிவு மற்றும் பெயர் ஒப்புதல் 
  • GST, PAN, TAN, ESI, PF பதிவு 
  • வங்கிக் கடன் மற்றும் நிதி வசதிகள் 
  • தொழிலுக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் இடத் தேர்வு 
  • Feasibility Study மற்றும் Project Planning

போன்ற பல விஷயங்கள் விரிவாக எடுத்துரைக்கப்பட உள்ளது.

44
கட்டணம் எவ்வளவு?
Image Credit : Asianet News

கட்டணம் எவ்வளவு?

இந்த அரசு சான்றிதழ் பயிற்சிக்கான கட்டணம் ரூ.3,540 (GST உட்பட) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எப்படி பதிவு செய்வது?

ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தி பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு:

95000 34831 96772 90237 72005 26886

என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பவர்களுக்கு இந்த அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். தொழிலை சரியான முறையில் தொடங்கி வெற்றிகரமாக நடத்த தேவையான வழிகாட்டுதல்களை இந்த 4 நாள் பயிற்சி வழங்குகிறது. தொழில்முனைவோர் கனவை நனவாக்க விரும்புபவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிகம்
வணிக யோசனை
வணிக உரிமையாளர்
பயிற்சிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fuel War: பெட்ரோல், டீசல், CNG, ஹைப்ரிட்... 2026-ல் எந்த வண்டி வாங்குனா காசு மிச்சமாகும்?
Recommended image2
CMO-க்கள் ஏன் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்? விவேக் ஷேத் உடைக்கும் உண்மைகள்
Recommended image3
Airport Alert : உஷார்.! ஏர்போர்ட்டில் அதிகம் பறிமுதல் செய்யப்படும் 10 பொருட்கள் என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா
Recommended image2
Side Business Ideas: வெறும் ₹200 முதலீட்டில் 5 சூப்பர் பொருட்கள்! வீட்டில் இருந்தே செமயா சம்பாதிக்கலாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved