MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா

Business Idea : ரூ.50 ஆயிரம் முதலீடு.. மாதம் ரூ.1 லட்சம் வருமானம்.. இளைஞர்களை கவரும் புதிய பிசினஸ் ஐடியா

வெறும் ரூ.50 ஆயிரம் முதலீடு... ஆனால் மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானமா? இந்த புதிய பிசினஸ் ஐடியா தற்போது இளைஞர்களிடையே வேகமாக பிரபலமாகி வருகிறது.

2 Min read
Author : Raghupati R
Published : May 16 2026, 08:07 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குறைந்த முதலீட்டு தொழில்
Image Credit : Gemini

குறைந்த முதலீட்டு தொழில்

இந்தியாவில் செல்லப்பிராணிகளை வளர்ப்போரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில், பெட் மற்றும் பெட் ஆக்சஸரீஸ் விற்பனை தற்போது லாபகரமான சிறு தொழிலாக மாறியுள்ளது. குறிப்பாக நகரங்கள் மற்றும் வளர்ந்து வரும் டவுன் பகுதிகளில் நாய்கள், பூனைகள் போன்ற செல்லப்பிராணிகளுக்கான சிறப்பு உணவுகள், விளையாட்டு பொருட்கள், ஷாம்புகள், பெட்கள், காலர்கள் மற்றும் உடைகள் வாங்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், குறைந்த முதலீட்டில் தொடங்கக்கூடிய இந்தத் துறையில் இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
சிறு தொழில் ஐடியா
Image Credit : Getty

சிறு தொழில் ஐடியா

சந்தை நிபுணர்களின் தகவல்படி, இந்த தொழிலை ரூ.50 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை முதலீட்டில் தொடங்க முடியும். ஆரம்பத்தில் சிறிய அளவில் பெட் ஃபுட், ஃபீடிங் பவுல், டாய்ஸ், லீஷ், கிரூமிங் பொருட்கள் போன்றவற்றை வாங்கி விற்பனை செய்யலாம். கடை வாடகைக்கு எடுக்காமல் கூட வீட்டிலிருந்தே இந்த தொழிலை நடத்த முடியும் என்பது கூடுதல் பலனாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக Instagram, WhatsApp, Amazon மற்றும் Flipkart போன்ற ஆன்லைன் தளங்கள் மூலம் விற்பனைக்கான வாய்ப்பு உள்ளது.

Related Articles

Related image1
Amazon Now: பாதி விலைக்கு மளிகை சாமான்கள்! அசத்தும் அமேசான்! வாடிக்கையாளர்கள் ஹேப்பி! முழு விவரம்!
Related image2
Gold vs Silver : 47% லாபம் தங்கம்.. 147% லாபம் வெள்ளி!.. தற்போதைய சூழலில் முதலீட்டுக்கு எது சிறந்தது?
35
பெட் ஃபுட் பிசினஸ்
Image Credit : Gemini AI

பெட் ஃபுட் பிசினஸ்

இந்த தொழிலை தொடங்குவதற்கு முன், உள்ளூர் சந்தையில் அதிகம் தேவைப்படும் பொருட்கள் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு மொத்த விற்பனையாளர்களிடம் இருந்து குறைந்த விலையில் பொருட்களை வாங்கி விற்கலாம். காலப்போக்கில், பிரபல பெட் ஃபுட் பிராண்டுகள், ட்ரீட்ஸ், மருத்துவ உபகரணங்கள் மற்றும் செல்லப்பிராணி பராமரிப்பு பொருட்களை சேர்த்து விற்பனை விரிவுபடுத்தலாம். கூடுதலாக, பெட் கிரூமிங் மற்றும் ஹோம் டெலிவரி சேவைகளையும் இணைத்தால் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

45
செல்லப்பிராணி தொழில்
Image Credit : AI Meta

செல்லப்பிராணி தொழில்

இந்த துறையில் பொதுவாக 20 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை லாப விகிதம் கிடைக்கும் என வியாபாரிகள் கூறுகின்றனர். நிரந்தர வாடிக்கையாளர்கள் உருவான பிறகு, மாதத்திற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வருமானம் பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, செல்லப்பிராணிகளுக்கான உணவை அடிக்கடி வாங்கும் வாடிக்கையாளர்கள் இருப்பது இந்த தொழிலுக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

55
பெட் ஆக்சஸரீஸ்
Image Credit : Pixabay

பெட் ஆக்சஸரீஸ்

ஆனால், ஆரம்ப கட்டத்தில் வாடிக்கையாளர்களை ஈர்ப்பது சற்று சவாலாக இருக்கலாம். தரமான பொருட்கள் வழங்கப்படாவிட்டால், வாடிக்கையாளர்கள் வேறு பிராண்டுகளுக்கு மாறும் அபாயமும் உள்ளது. மேலும், ஆன்லைன் போட்டி அதிகமாக இருப்பதால் சரியான மார்க்கெட்டிங் அவசியம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், செல்லப்பிராணி பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்தில் இந்த துறைக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்பு இருப்பதாக சந்தை வல்லுநர்கள் நம்புகின்றனர்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
முதலீடு
வணிகம்
வணிக யோசனை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chennai Real Estate: சென்னையில் எகிறும் வீடு விற்பனை! 'ரெடி டூ மூவ்' வீடுகளை மக்கள் அதிகம் விரும்புவது ஏன்?
Recommended image2
Gold vs Silver : 47% லாபம் தங்கம்.. 147% லாபம் வெள்ளி!.. தற்போதைய சூழலில் முதலீட்டுக்கு எது சிறந்தது?
Recommended image3
Petrol Diesel Price Hike: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயருகிறதா? SBI பகீர் அறிக்கை! முழு விவரம் உள்ளே!
Related Stories
Recommended image1
Amazon Now: பாதி விலைக்கு மளிகை சாமான்கள்! அசத்தும் அமேசான்! வாடிக்கையாளர்கள் ஹேப்பி! முழு விவரம்!
Recommended image2
Gold vs Silver : 47% லாபம் தங்கம்.. 147% லாபம் வெள்ளி!.. தற்போதைய சூழலில் முதலீட்டுக்கு எது சிறந்தது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved